தலைகீழாக தேசியக்கொடி ஏற்றிய தி.மு.க. எம்.எல்.ஏ.!

தலைகீழாக தேசியக்கொடி ஏற்றிய தி.மு.க. எம்.எல்.ஏ.!

Share it if you like it

தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் தலைகீழாக தேசியக்கொடி ஏற்றிய சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரத தேசத்தின் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் போன்ற நாட்களில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. நிகழாண்டு 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, பொதுமக்களும் மிகுந்த ஆர்வமுடன் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினர். அந்த வகையில், ஒரு பள்ளியில் தேசியக்கொடி ஏற்றிய தி.மு.க. எம்.எல்.ஏ. தலைகீழாக கொடியேற்றி கேலி, கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா சத்திரம் புதூர் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, இப்பள்ளியில் இன்று காலை தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக நெய்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றினார். அப்போதுதான் தலைகீழாக கொடியை ஏற்றி இருக்கிறார். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டனர். இதைப் பார்த்துவிட்டு, தேசியக்கொடியை எப்படி ஏற்ற வேண்டும் என்று தெரியாத இவரெல்லாம் ஒரு எம்.எல்.ஏ.வா என்று பலரும் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it