இதாங்க வி.சி.க.வின் சுயரூபம்!

இதாங்க வி.சி.க.வின் சுயரூபம்!

Share it if you like it

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான கட்சி என்று பறைசாற்றிக் கொள்ளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருப்பதுதான் வேதனை!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவில் இருக்கிறது கிள்ளை பேரூராட்சி. இதன் தலைவராக இருப்பவர் இருளர் சமூகத்தைச் சேர்ந்த மல்லிகா. தி.மு.க.வைச் சேர்ந்தவர்தான் என்றாலும், கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரோ மல்லிகாவை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து விசாரித்தபோது, இந்த பேரூராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டதாகவும், இதில் ஒருவர் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டவர் என்பதை சுட்டிக்காட்டியும், மற்றொருவருக்கு 2 இடங்களில் ஓட்டு இருப்பதை சுட்டிக்காட்டியும் தி.மு.க.வினர் தகுதி இழக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தில்தான் தி.மு.க. தலைவருக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி பேரூராட்சி தலைவர் மல்லிகா கூறுகையில், “நான் இந்தப் பதவிக்கு வந்தது சமூக ரீதியாக சிலருக்கு பிடிக்கவில்லை. அதை வெளிப்படையாக சொல்லாமல் தொடக்கத்திலிருந்தே என் மீது புகார்களை சுமத்தி வருகிறார்கள். ஆனால், நான் பொறுப்பேற்று 42 நாட்கள்தான் ஆகிறது. இன்னும் பேரூராட்சிக்கு எந்த நிதியும் வரவில்லை. எந்த வேலையும் தொடங்கப்படவில்லை. எனினும், ஊழல் செய்துவிட்டேன் என்று போராட்டம் செய்கிறார் விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர் பாரதியின் கணவர் விஸ்வநாதன். ஏதோ விஸ்வநாதன்தான் கவுன்சிலர்போல செயல்படுகிறார். அதிகாரிகளை மிரட்டுகிறார். தமிழக முதல்வர் இருளர் உள்ளிட்ட மிகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயமான எங்களுக்கு ஆதரவாக இருந்து எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் என் மீது புகார்களை சொல்லி போராட்டம் நடத்துவது வேதனையாக இருக்கிறது” என்றார் வேதனையுடன்.


Share it if you like it