தினக்கூலி பணியாளர்கள், தங்களை ௮ரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை !

தினக்கூலி பணியாளர்கள், தங்களை ௮ரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை !

Share it if you like it

வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரும் 11 ஆண்டுகால கோரிக்கை மீது அரசு தனி கவனம் செலுத்தவும், முதல்வர் இதில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

16 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி பணியாளர்கள், தங்களை ௮ரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், 192 தினக்கூலி தொழிலாளர்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி முடித்த 46 பேரை 2019-ம் ஆண்டு முதல் பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு பூங்கா நிர்வாகம் கருத்துரு அனுப்பியது.

ஆனால் அரசு இதனை ஏற்கவில்லை. இதனிடையே தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும், 2023-ம் ஆண்டு, 86 பேர் அடங்கிய பட்டியலை பூங்கா நிர்வாகம் கருத்துருவாக அனுப்பியது. மீண்டும் அரசு ஏற்கவில்லை. பூங்கா நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பியும் அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

இது தொழிலாளர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதி ௮வர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வர வேண்டும். தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி மக்களவை தேர்தலுக்கு முன் இதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக அரசு சார்பில் பூங்கா ஊழியர்களின் சம்பள விவரம் கேட்கப்படுகிறது. ஆனால், இந்த விவரம் பூங்கா நிர்வாகத்திடம் இல்லை. காரணம் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் இவர்கள் பணிபுரிவதால் சம்பள விவர தகவல்கள் இல்லை. கடைசியாக, 1991-ம் ஆண்டு, 72 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.


Share it if you like it