இந்தியாவின் முதல் பட்டியலினத் தலைவர் – திரு. M.C. ராஜா

இந்தியாவின் முதல் பட்டியலினத் தலைவர் – திரு. M.C. ராஜா

Share it if you like it

ராவ்பகதூர் எம்.சி.ராஜா பிள்ளை அவர்கள் அகில இந்திய அளவில் ஷெட்யுல்ட் இன மக்களை ஒருங்கினைத்த முதல் சமூகப் பிரதிநிதி.1916 முதல் 1943 வரை ராவ்பகதூர் ராஜாவின் அரசியல் எழுச்சி என்பது மறந்து போன ( இருட்டடிப்பு செய்யப்பட்ட) வரலாற்று உண்மை.

பாபாசாகேப் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, ராவ்பகதூர் எம்.சி. ராஜா பிள்ளை (1916 இல்) சென்னை மாகான ஆதி திராவிடர் மஹாஜன சபையின் மாகான செயலாளர். அப்போது பாபாசாகேப் அம்பேத்கர் வெளிநாட்டில் படித்துக் கொண்டு இருந்தார்.

அக்காலத்தில் அவர் பறையர்களின் பிரதிநிதியாக நீதிக் கட்சியில் இருந்தார். 1920ல் நடந்த முதல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றார். சட்டசபைக்கு நீதிகட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் sc உறுப்பினர் ராஜாதான்.

1920 களில் ரவ்பகதூர் எம் சி ராஜா சட்டமன்றத்தில் ஆதி திராவிட மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் இட ஒதுக்கீட்டிற்கான பல தீர்மானங்கள் கொண்டு வந்தார். 1922 இல் அரசு கொடுக்கும் ஸ்காலர்ஷிப்புகளில் 50 சதவிகிதம் ஆதி திராவிட மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அன்று அந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்குவாதங்கள் நடந்தது. ஆதி திராவிட சமூகத்தில் போதிய மாணவர்கள் இல்லாததால் அந்த ஸ்காலர்ஷிப் பார்ப்பணரல்லாதார் மற்றும் ஏழை பார்ப்பணர்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ராவ்பகதூர் கொண்டுவந்த தீர்மானங்களும் அதனால். ஆதி திராவிட மாணவர்கள் பெற்ற சலுகைகளும் ஏராளம். நீங்க சொல்லும் காமராசர் மதிய உணவு திட்டத்தின் மூல கர்த்தாவும் இந்த ராவ்பகதூர் எம்சி ராஜாதான் .. (ஆதாரம் G.O.No. 1053 Development Department, dated 7/5/1940)

ஆதி திராவிட மாணவர்களின் உரிமைகளுக்காக ராவ்பகதூர் ராஜா ஆற்றிய பணிகள் தொடர்பாக மேலும் விபரம் அறிய தமிழ்நாடு அரசு ஆவணங்களை அலசுங்கள்……

G.O.No. 300 Labour (Education) Department dated 14/3/1924
G.O.No. 3348 Labour (General) Department dated 27/11/1924
G.O.No. 2914 Labour (General) Department dated dated 21/9/1925
G.O.No. 698 Labour (General) Department dated dated 26/4/1926
G.O.No. 922 Education Department dated 30/4/1928
G.O.No. 899 Labour (Education) Department dated 28/4/1928
G.O.No. 981 Education Department dated 1/5/1928
G.O.No. 3281 Public Works Department dated 21/12/1931
G.O.No. 251 Labour (Education) Department dated 16/2/1933
G.O.No. 736 Education and Public Health Department dated 24/3/1938
G.O.No. 2104 Development Department dated 27/8/1938.

இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க உள்ள ஆதி திராவிட பள்ளிகள், ஆதி திராவிட ஹாஸ்டல்களின் தோற்றத்துக்கு காரணமானவர் ராவ்பகதூர் எம்சி ராஜா.

1920 முதல் 1943 வரை அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. 1920 களில் சென்னையில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டங்கள்தான் இன்னறைய தொழிலாளர் அமைப்புகளுக்கும் தொழிலாளர் உரிமைகளுக்கும் மூல முதற் காரணம்.

1920 இல் தொழிலாளர் உரிமைகளுக்காகவும் பறையர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தொழிலாளர் அட்வைசரி வாரியம் அமைக்கப்பட்டது. அந்த வரியத்தின் பிரதிநிதிகளாக எம் சி ராஜா ஆற்றிய பணிகள் ஏராளம்.

1921ல் பனகல் அரசரின் நீதிக்கட்சியரசு அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டினை அமலுக்குக் கொண்டுவந்தது. அதில் பறையர்களுக்கு எந்தவொரு சலுகையும் தரப்படவில்லை. அதை எதிர்த்து போராட்டியவர் ராவ்பகதூர். அன்றைக்கே பார்ப்பணரல்லாதார் இயக்கம் பறையர்களுக்கு எதிராக இயங்கியதை சுட்டிக்காட்டி அந்த இயக்கத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பறையர்களுடன் வெளியே வந்தவர்.

காந்தி ஹரிஜன் என்று பெயர் சூட்டியபோது அதை எதிர்த்து நின்றார் என்பது கவணிக்க வேண்டிய ஒன்று.

1928 இல் சைமன் வரும் வரை, மாகான அரசியல் சட்டம் இயற்றும் உரிமைகள் மாகான அரசிடம்தான் இருந்தது. அன்றைக்கு அந்த மாகான மக்களின் அரசியல் சட்ட உரிமைகளுக்காக அந்த மாகான மக்களே போராடினார்கள்.

அண்ணல் அம்பேட்கர் மஹார்களின் உரிமைகளுக்காக பம்பாய் மாகானத்தில் போராடியது போல சென்னை மாகானத்தில் பறையர்களின் பிரதிநிதிகள் போராடினார்கள். அவர்கள் எவரும் அண்ணல் அம்பேட்கரை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. 1928 இல் சைமன் கமிஷன் இந்தியா வந்தபோது, அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் அமைப்பின் சார்பாக எம்.சி.ராஜா இந்தியா முழுக்க இருந்த 18 மாகான அமைப்புகளை ஒருங்கிணைத்தார்.

அக்காலத்தில், தமிழகத்தில், தாத்தா இரட்டைமலை சீனிவாசனின், ராவ்பகதூர் எம்சி ராஜா, சுவாமி சகஜானந்தா, ஜான்ரத்னம், தந்தை சிவராஜ், அன்னை மீனாம்பாள், முனுசாமி பிள்ளை என பல பிரதிநிதிகள் இருந்தனர். இவர்கள் எவரும் அண்ணல் அம்பேட்கரை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. சுவாமி சகஜானந்தா, ஆசான் எம்சி ராஜா, முனுசாமி பிள்ளை, தந்தை சிவராஜ், அன்னை மீனாம்பாள் எல்லோருமே அகில இந்திய அளவில் அரசியல் நடத்தியவர்கள்.

1928 இல் ராவ்பகதூர் எம்.சி.ராஜா அகில இந்திய அளவில் பட்டியல் மக்களுக்காக இயக்கம் ஆரம்பித்த போது, பாபாசாகேப் பம்பாய் மாகானத்தில் மஹார்களுக்கு மத்தியில் மட்டுமே பிரபலம். அப்போது அவருக்கு கொடி பிடிக்க கோஷம் போட தமிழ் நாட்டில் ஒரே ஒரு தொண்டர் கூட இருந்தது கிடையாது. அன்றைக்கு ராவ்பகதூர் எம் சி ராஜா பிரமாண்டம். 1933 இல் மத்திய பாராளுமன்றத்தில் அவர் கொண்டு வந்த தீண்டாமை ஒழிப்பு மசோதா தான் இன்றைய அரசியல் சட்டத்தின் மூலம்.

1942 வரைக்கும் பம்பாய் மாகானத்தில் மகார் மக்களுக்கு மத்தியில் இயக்கம் நடத்திய அண்ணல் தேசிய தலைவர். அவர் வாங்கிக் கொடுத்ததுதான் அரசியல் உரிமைகள். அவரது குரு பூலே மகாராஜா சாஹு மகாராஜா சிவாஜி மகாராஜா எல்லாம் தேசிய தலைவர்கள்.

இந்தியாவிலேயே முதல் இயக்கம் கட்டிய தாத்தா பறையர்களுக்கு மட்டும் தலைவர், புத்த தன்ம மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பண்டிதர் பறையர்களுக்கு மட்டும் தலைவர், முதன் முதலில் ஆகில இந்திய அளவில் இயக்கம் நடத்திய, முதல் முதலில் இந்தியா முழுக்க உள்ள பட்டியல் மக்களை ஒருங்கிணைத்த, முதன் முதலில் அகில இந்திய அமைப்பை உருவாக்கி அதற்கு தலைவராக இருந்த, முதன் முதலில் பட்டியல் மக்களின் பிரதிநிதியாக 1926 இல் பாராளுமன்றத்துக்குள் சென்ற ராவ்பகதூர் எம்சி ராஜா பறையர்களுக்கு மட்டும் தலைவர்.

1916 முதல் அன்றைய தமிழ் நாட்டில் அரசியல் இயக்கம் நடத்தியவர். 1928 முதல் 1943 இல் தான் சாகும் வரை தேசிய அளவில் தலித் அரசியல் இயக்கம் கட்டி நடத்தியவர். காந்திஜி, காங்கிரஸ் மற்றும் நீதிக் கட்சி தலைவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியலை தலை கீழாகப் புரட்டியவர். இன்றைக்கு தமிழ்நாட்டுப் பறையர்கள் அனுபவிக்கும் அணைத்து அரசியல் சட்ட உரிமைகளையும் அடைவதற்கு நேரடிக் காரணமானவர் ராவ்பகதூர் எம்சி ராஜா.

அவர் இவர்களுக்கு துரோகியாகத் தெரிகிறார். ஆனால் ஏற்கனவே இருந்த உரிமைகளுக்கு ஒரு சட்ட வரையரை கொடுத்த அண்ணல் அம்பேட்கர் மூல முழு முதல் காரணமாகத் தெரிகிறார்.

என்னுடைய நோக்கம் யாரையும் குறைத்து மதிப்பிடுவது இல்லை. ஒருவரை உயர்த்திக் காட்ட மற்றைய தனி மனிதர்களை, அவர்களது குடும்பத்தை, ஒரு பாரம்பரியம் மிக்க சமூகத்தை கேவலப்படுத்தாதீர்கள் என்பதே.

இரட்டை வாக்குரிமை என்பதை அம்பேட்கர் கண்டு பிடித்த மாதிரியும் அதை ராஜா எதிர்த்த மாதிரியும் ஒரு கற்பணை கதையை பரப்பி எம் சி ராஜாவுக்கு துரோகி முத்திரை குத்தி வரும் கூட்டத்திற்கு பெயர்தான் அம்பேட்கர்வாதிகள். ஆனால் உண்மை வரலாறு வேறு என்பது இந்த சமூகத்தில் பிறந்து ஈ எச்டி படித்த பல வரலாற்று அறிஞர்களுக்கு கூடத் தெரியவில்லை என்பது கசப்பான உண்மை.

1928 இல் சைமன் கமிஷன் இந்தியா வந்தபோது, அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் அமைப்பின் சார்பாக எம் சி ராஜாவும், இந்தியா முழுக்க இருந்து வந்த 18 மாகான அமைப்புகளில் 16 அமைப்புகள் செபரேட் எலக்கட்டரேட் (இரட்டை வாக்குரிமை) வேண்டும் என்று கேட்டார்கள். இரண்டு மாகான ஒடுக்கப்பட்டோர் அமைப்புகள் எங்களுக்கு செபரேட் எலக்ட்டரேட் (இரட்டை வாக்குரிமை) வேண்டாம் ஜாயின்ட் எலக்ட்டரேட்டில் (தற்போது உள்ள இட ஒதுக்கீடு) பிரதிநிதித்துவம் கொடுத்தால் போதும் என்று கேட்டுக் கொண்டன அதில் ஒன்று பகிஷ்க்ரத் பாரத் எனும் பம்பாய் மாகான அமைப்பு. அதன் தலைவர் டாக்டர் அம்பேட்கர் பட்டியல் மக்களுக்கு செபரேட் எலகட்டரேட் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதோடு மட்டும் அல்லாமல் இஸ்லாமியர்களுக்கும் செபரேட் எலக்ட்டரேட் கொடுக்க்க கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

எம்.சி.ராஜா அவர்களின் அகில இந்திய அமைப்பும் மற்றும் 16 மாகான அமைப்புகளும் கோரிய இரட்டைய வாக்குரிமையை சைமன் கமிஷன் நிராகரித்தபோது அதை பாராட்டியவர்தான் டாக்டர் அம்பேடகர்.

அதன் பின்னர் 1929 இல் முதல் வட்ட மேஜை மாநாட்டிலும் அண்ணல் அம்பேட்கர் இரட்டை வாக்குரிமை கேட்காமல் ஜாயின்ட் எலக்ட்டரேட் வேண்டும் என்றே கேட்டார். 1931 க்குப்பிறகுதான் அவர் இரட்டை வாக்குரிமைக்கு ஆதரவு தெரிவிக்கிறார். அதன் பிறகுதான் இரண்டாவது வட்ட மேஜை மாநாடு பூனா உடன்படிக்கை எல்லாமே. அதன் பிறகு இரட்டை வாக்குரிமை ஆதரவாளராக இருந்தவர் சட்ட அமைச்சாரான பிறகு அதை மறந்தது ஏனோ என்பதுதான் ஆய்வு செய்ய வேண்டிய விஷயம்.

இரட்டைமேஜை மாநாட்டிற்கு அண்ணல் அம்பேட்கர் பெயர் அறிவிப்பதற்கு முன்னர், எல்லோரும் எதிர்பார்த்த ஒரு பெயர் ராவ்பகதூர் எம்சி ராஜா. அன்றைக்கு அவர்தான் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் அமைப்பின் தலைவர். அவர் ஒருவர்தான் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் பிரதிநிதியாக டெல்லி பாராளுமன்றத்தில் உரிமைக்குரல் எழுப்பிக் கொண்டு இருந்தார். எம்சி ராஜா வட்ட மேஜை மாநாட்டுக்கு போகக் கூடாது என்று காந்தியும் காங்கிரசும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன்னர். அவருக்கு எதிர்பு அம்பேட்கரிடமிருந்தே வந்தது. ராஜா மும்பை மார்க்கமாக லண்டன் சென்றால் என் மக்கள் அவருக்கு கருப்புக் கொடி காட்டுவார்கள் என்றார். யார் அந்த என் மக்கள். மஹார்களா? அம்பேட்கர்வாதிகளா? யாருக்கு யார் கருப்புக் கொடி காட்டுவது. யாரை எதிர்ப்பதற்கு யார் உருவாக்கப்பட்டார் என்பதை அரசியல் புரிந்தவர் உணர்வார்கள்.

ராவ்பகதூர் எம்.சி.ராஜா மதமாற்றத்துக்கு எதிரி போலவும் இந்து மதவாத ஆதரவாளர் போலவும் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், ராவ்பகதூர் மதமாற்றத்தை எதிர்க்கவில்லை. தனி மனிதர்கள் நம்பிக்கையின் பெயரில் மதம் மாறுவது தவரில்லை மதமாற்ற அரசியல் வேண்டாம் அது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார். மதவாதம் ஆபத்தானது. மதக்கலவரம் மதவாதப் போட்டிகளில் எங்களை நாங்கள் அடமானம் வைக்க விரும்பவில்லை என்றார் ராவ்பகதூர். (“We do not wish to be pawns in the game of communal conflicts and competition.” Raobhadur M.C. Rajah.)

  • ஸ்வாமிநாதன்

Share it if you like it