தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தென்னிந்திய மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்களில் மொத்த கொள்ளளவில் 17 சதவீதம் மட்டுமே நீர் தற்போது இருப்பதாகவும் இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தென்னிந்தியாவில் உள்ள 42 நீர்த்தேக்கங்களில் சராசரி மேற்கொள்ள அளவு 53 பில்லியன் கன அடி என்ற நிலையில் தற்போது 8.865 பில்லியன் கன அடி மட்டுமே காணப்படுவதாகவும் இது மொத்த கொள்ளளவில் 17 சதவீதம் என்றும் மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூரில் மிக மோசமான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்துள்ளது. வீடுகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டதால் பலரும் கனவு நகரமான பெங்களூரை காலி செய்து விட்டு தற்காலிகமாக சொந்த ஊருக்கு சென்று விடலாமா என்று யோசித்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ன எடுக்கலாம் என்று தமிழ்நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் யோசிக்காமல் மிகவும் சுயநலமாக விடுமுறை எடுத்து கொடைக்கானலில் குடும்பத்தோடு ஜாலியாக இருக்க சென்றுவிட்டார். நமது அண்டை மாநிலமான கர்நாடகா தண்ணீர் பிரச்சனையில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று மத்திய நீர் ஆணையமே எச்சரிக்கை விடுத்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க கொடைக்கானல் சென்றுள்ளார்.
நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி கூட ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் நாளையும் நேரத்தையும் பார்க்காமல் செவ்வனே நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் அயராது உழைத்து வருகிறார். ஆனால் ஸ்டாலினோ தேர்தலுக்கு முன்பு மனைவியுடன் வெளி நாடு சென்றார். தேர்தல் முடிந்த நிலையில் தற்போது கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். இதிலிருந்தே யார் நாட்டிற்காக உழைத்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு புரியும்.