தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு பேசியிருந்தார்.
காவல்துறை சுதந்திரமாக செயல்படவேண்டும். எந்த பிரச்னைக்காகவும் யாருக்காகவும் காவல்நிலையத்திற்கு, சென்றோ அல்லது தொலைப்பேசியில் பேசவோ கூடாது. காவல்துறை தன்வசம் இருப்பதால். அவை தொடர்பான புகார்களை அமைச்சர்கள் தன்னிடமே கூற வேண்டும்.
அமைச்சர்கள் மீது புகார்கள் வந்தால், அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையற்ற சர்ச்சைகளுக்குள் அமைச்சர்கள் சிக்ககூடாது. அமைச்சர்கள் தங்கள் துறைச் சாரந்த புள்ளி விவரங்களை, நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று. தி.மு.க-வின் மிக மூத்த தலைவர் துரைமுருகன் உட்பட புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொழுது நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, திரு திருவென்று விழித்துள்ளார் முதல்வர். அருகில் இருந்த அமைச்சர் கே.என் நேரு. அவர்கள் பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து உள்ளார். விடியல் முதல்வரே இப்படி இருந்தால் தமிழக மக்களுக்கு எப்படி விடியும் என்று பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பதில் சொல்ல தெரியாமல் முதல்வர் தடுமாறிய போது.. அமைச்சர் KN.நேரு வந்து காப்பாத்திட்டாரு…
#கோடி_எங்கடா_கேடி pic.twitter.com/lEvWm0nKws
— 😇 (@Nallavan6666) May 22, 2021