ஆஸ்பத்திரிய காணோம்… டெல்லி மக்கள் கதறல்!

ஆஸ்பத்திரிய காணோம்… டெல்லி மக்கள் கதறல்!

Share it if you like it

458 படுக்கைகளுடன் கட்டப்பட்ட ஆஸ்பத்திரியை காணவில்லை என்று டெல்லி மக்கள் கதறி வரும் சம்பவம்தான் அரசியலில் ஹாட் டாபிக்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்து வருகிறார். இலவச குடிநீர், இலவச மின்சாரம், இலவச பஸ் பயணம் என ஏகப்பட்ட இலவச அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். இந்த இலவசங்கள் மக்களுக்கு வழக்கப்பட்டு வருகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், அரவிந்த் கெஜ்ரிவால் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்தான் திகைக்க வைக்கின்றன. ஊழலற்ற, ஒளிவுமறைவற்ற ஆட்சியைத் தருவேன் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்த கெஜ்ரிவால் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் தலைவிரித்து ஆடுகிறது. கெஜ்ரிவால் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் சந்தியேந்திர ஜெயின் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், கட்டாத மருத்துவமனையை கட்டி முடித்ததாக பில் போட்டு 1,256 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதாவது, கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதலாக தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பதற்கு டெல்லி அரசுத் தரப்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில், கூடுதல் மருத்துவமனைகள் அமைக்க 1,256 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இதில்தான் ஊழல் நடத்திருப்பதாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா மற்றும் வடகிழக்கு டெல்லி எம்.பி. மனோஜ் திவாரி ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுதான் இக்குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறது.

எனவே, டெல்லி அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று டெல்லி துணைநிலை ஆளுனர் வி.கே.சக்சேனாவிடம் பா.ஜ.க. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவும், ஊழல் தடுப்பு பிரிவு விசாரிக்க அனுமதி வழங்கினார். இந்த சூழலில்தான், கெஜ்ரிவால் அரசு டெல்லி கிராரியில் 458 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஆஸ்பத்திரியை பார்வையிட பா.ஜ.க. தலைவர்கள் குழு நேற்று சென்றது. ஆனால், அந்த இடத்தில் ஒரு செங்கல்கூட இல்லை. வெறும் தரிசு நிலமும், ஒரு பலகையும் மட்டுமே இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, “மருத்துவமனை கட்டுகிறோம் என்ற பெயரில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லிவாசிகளை ஏமாற்றி விட்டார். இதன் விளம்பரத்துக்கு மட்டும் 27 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த இடத்தில்தான்டெல்லி அரசு 600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறியிருக்கிறது” என்று திவாரி குற்றம்சாட்டி இருக்கிறார்.


Share it if you like it