2023-24 ம் ஆண்டு மட்டும் 10,000 கோடிக்கும் அதிகமான ஒருங்கிணைந்த கட்டண பரிவர்த்தனைகள் (UPI) நடைபெற்றுள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
உங்களுக்கு தெரியுமா?
- குஜராத்திற்கு மேலும் ஒரு புல்லட் ரயில் திட்டம். தற்போது குஜராத்தின் சபர்மதியிலிருந்து டில்லிக்கு 12 மணிநேரம் ஆகின்ற நிலையில், இந்த ரயில் மூன்றரை மணி நேரத்தில் டில்லி சென்றடையும்.
- 2023-24 ம் ஆண்டு மட்டும் 10,000 கோடிக்கும் அதிகமான ஒருங்கிணைந்த கட்டண பரிவர்த்தனைகள் (UPI) நடைபெற்றுள்ளன.
3.ஆப்பிள் நிறுவனம் தன் ஐ-ஃபோன் கேமரா உதிரி பாகங்களை தயாரிக்க அல்லது ஒன்றிணைக்க முருகப்பா மற்றும் டாடாவின் டைட்டன் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
- இண்டிகோ விமான நிறுவனம் மேலும் 500 பயணிகள் விமானங்களை கொள்முதல் செய்ய ஏர் பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் 2035ம் ஆண்டுக்குள் 1300க்கும் அதிகமான விமானங்களை கொண்ட நிறுவனமாகும் இண்டிகோ.
- டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா நிறுவனம் ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து 250 பயணிகள் விமானங்களையும், போயிங் நிறுவனத்திடமிருந்து 220 விமானங்களையும் பெறுவதற்கான ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது.
- அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு மட்டும், இந்த ஆண்டு 5000 டன் மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதை இலக்காக வைத்துள்ளது மஹாராஷ்டிரா மாநிலம்.
- 2023 ல் 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் 735 பேர், சீனாவில் 495 பேர், இந்தியாவில் 169 பேர், ஜெர்மனியில் 126 பேர்,ரஷ்யாவில் 105 பேர். இவ்வாறு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.