பா.ஜ.க.வில் இணையும் நடிகை ராதிகா சரத்குமார்? பிரதமர் மோடியுடன் தனியாக சந்திப்பு!

பா.ஜ.க.வில் இணையும் நடிகை ராதிகா சரத்குமார்? பிரதமர் மோடியுடன் தனியாக சந்திப்பு!

Share it if you like it

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு விழாவில், பங்கேற்ற நடிகை ராதிகா சரத்குமார், திடீரென பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இதனால், ராதிகா பா.ஜ.க.வில் சேரப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது.

டெல்லியிலுள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் பாரம்பரிய உடையுடன் பாரத பிரதமர் மோடி கலந்து கொண்டார். இவ்விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக, பா.ஜ.க.வுடன் நெருக்கமாக இருப்பவர்கள், நட்பாக இருப்பவர்கள், சினிமா உலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், நடிகை ராதிகா சரத்குமாரும் கலந்து கொண்டதுதான் வியப்பு.

பின்னர், பிரதமர் மோடி வரும்போது அவரை வரவேற்க பலரும் வரிசையில் நின்றிருந்தனர். அந்த வரிசையில் ராதிகாவும் நின்று கொண்டிருந்தார். அப்போது, வரிசையாக நின்றவர்களை பார்த்து வணக்கம் வைத்துக்கொண்டே வந்த மோடி, ராதிகாவையும் பார்த்து சிரித்தபடியே வணக்கம் வைத்தார். பதிலுக்கு ராதிகாவும் சிரித்துக் கொண்டே வணக்கம் வைத்தார். இதன் பிறகு, சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடியை தனியே சந்தித்து பேசினார். அப்போது, ராதிகாவும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இதனால், ராதிகா பா.ஜ.க.வில் சேர்வாரா என்கிற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.


Share it if you like it