வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பை குறைக்க கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக நாடகம்!

வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பை குறைக்க கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக நாடகம்!

Share it if you like it

கிறிஸ்துவர்கள் மீதும், கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது பொய்யான தகவல். வீண் பிரச்னையை ஏற்படுத்தவும், வெளிநாடுகளில் நம் நாட்டின் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

கிறிஸ்தவர்கள் மீதும், கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “கடந்த 2021 முதல் 2022 மே மாதம் வரை 500 வன்முறை சம்பவங்கள் நடந்திருப்பதாக இவ்வழக்கில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மாநில அரசுகளின் கருத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டது.

அதன்படி, மாநில அரசுகள் அளித்துள்ள தகவல்களில், இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் நடக்கவில்லை. சில சம்பவங்கள் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சண்டையாக இருக்கின்றன. இதில், சில சம்பவங்களில் கிறிஸ்தவர்களே ஈடுபட்டிருக்கிறார்கள். பீஹாரில் சில சம்பவங்கள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக எந்தவொரு வன்முறையும் நடக்கவில்லை என்று மாநில அரசு தெரிவித்திருக்கிறது. அதேபோல, சத்தீஸ்கர் உட்பட பல்வேறு மாநிலங்களும் இதே கருத்தையே தெரிவித்திருக்கின்றன. நம் நாட்டில் மத ரீதியில் பிரச்னையை உருவாக்கவும், வெளிநாடுகளில் நம் நாட்டின் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தவும் இதுபோன்ற சதி நடக்கிறது” என்று கூறினார்.

இதையடுத்து, உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள அறிக்கை குறித்து பதிவளிக்கும்படி, கிறிஸ்துவ நிறுவனங்களுக்கு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையும் 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.


Share it if you like it