பரோலில் வந்த பயங்கரவாதிக்கு உற்சாக வரவேற்பு: வைரலாகும் வீடியோ!

பரோலில் வந்த பயங்கரவாதிக்கு உற்சாக வரவேற்பு: வைரலாகும் வீடியோ!

Share it if you like it

டெல்லி கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பயங்கவாதி ஷாருக் பதானுக்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியில் 2020 பிப்ரவரி மாதம் 24-ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஹிந்துக்கள் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. அப்போது, முகமது ஷாருக் பதான் என்கிற பயங்கரவாதி, ஹிந்துக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, போலீஸ்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில், இரு போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, எதுவுமே தெரியாததுபோல வீட்டுக்குச் சென்றவன், அங்கிருந்து எஸ்கேப்பாகி உத்தரப் பிரதேச மாநிலத்துக்குச் சென்று நண்பரின் வீட்டில் தஞ்சமடைந்து விட்டான். ஆனால், அவனது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து கைது செய்தது போலீஸ் டீம். பின்னர், டெல்லியிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த நிலையில், அவனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால், மகனை சந்திக்க வேண்டும் என்று தொடர்ந்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வந்தார். எனினும், அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனிடையே, 65 வயதாகும் அவனது தந்தைக்கு கடந்த மார்ச் மாதம் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. எனவே, சில மணி நேரங்களாவது மகனை சந்திக்க வேண்டும் என்று மீண்டும் மனு போட்டார். மனிதாபிமான அடிப்படையில் இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஷாருக் பதானுக்கு 4 மணி நேரம் பரோல் கொடுத்தது. அதேசமயம், பரோலின்போது ஷாருக் பதான் அவனது தந்தையை மட்டுமே சந்திக்க வேண்டும். வேறு யாரையும் சந்திக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தது. அதன்படி, கடந்த 23-ம் தேதி 4 மணி நேர பரோலில் வெளியே வந்தான் ஷாருக் பதான்.

ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஷாருக் பதானுக்கு ‘வீர’ வரவேற்பு அளித்திருக்கிறார்கள். பெரும் படை சூழ அவனை அழைத்துச் சென்றதோடு, ஆரவாரம் செய்தும் கூச்சலிட்டனர். மேலும், விசிலடித்து அவனது வருகையை கொண்டாடினர். பாதுகாப்புக்கு வந்த போலீஸார், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதை ஷாருக் பதான் ரசித்தபடியே பெருமையோடு ஊர்வலமாக வந்தார். இந்த வீடியோ, தற்போதுதான் வெளியாகி இருக்கிறது. இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, ஷாருக் பதானின் பரோல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஒரு பயங்கரவாதிக்கு அவன் சார்ந்த சமூகத்தினர் இப்படி வரவேற்பு கொடுத்தால், குற்றவாளி எப்படி திருந்துவான். மேலும், குற்றங்களும் எப்படி குறையும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


Share it if you like it