அமெரிக்க பார் அசோசியேஷன் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக குடியரசு துணைத்தலைவர் தன்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பல மத சமூகங்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியாவின் நீண்ட வரலாற்றை எடுத்துரைத்தார். கள உண்மைகளைப் பற்றி அறியாத நிலையில், நமக்குப் பாடம் கற்பிக்க முயல்வோரை நிராகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பாராளுமன்றம் முதல் பஞ்சாயத்து நிலை வரை இந்தியாவில் உள்ள கட்டமைக்கப்பட்ட ஜனநாயக பாரம்பரியத்தை குடியரசு துணைத் தலைவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மற்றவர்களிடமிருந்து வேதங்களைப் பெறுவதற்கான தேசம் அல்ல பாரதம் என்றும்,5000 ஆண்டுகளுக்கும் மேலான நாகரீக நெறிமுறைகளைக் கொண்ட தேசம் என்றும் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் அடிப்படை யதார்த்தத்தை அறியாமல் எப்படி கவனிக்க முடியும்? நாங்கள் மனிதாபிமான அம்சத்தை பரிசீலித்து வருகிறோம். நமது அண்டை நாடுகளில் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கிறோம்.
யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படவில்லை. இதன் மூலம் மக்கள் பயனடைவார்கள். பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் இருப்பவர்களுக்கு இந்ந சட்டம் மூலம் நிவாரணம் அளிக்கப்படுவதாகவும் தன்கர் தெரிவித்தார்.