சமீபத்தில் புதுச்சேரி பல்கலைக் கழகமானது ஹிந்து தர்மத்தின் புனிதமான ராமாயண காவியத்தை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து நாடக நிகழ்ச்சியை ஒன்றை நடத்தியது. இதற்கு ஏபிவிபி உள்ளிட்ட பல வலதுசாரி அமைப்பினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
நாடகத்தில் சீதையின் பாத்திரம் “கீதா” என்றும் மேலும் அவர் “ராவணனுடன்” நடனம் ஆடுவது போலவும் “பாவனாவாகவும்” சித்தரிக்கப்பட்டது மிகவும் வேதனை அளிக்கக்கூடியது. அதிர்ச்சியூட்டும் வகையில், சீதை ராவணனுக்கு மாட்டிறைச்சியை வழங்குவது போல இதில் சித்தரிக்கப்பட்டது. சீதாவை கடத்தும் காட்சியில், “எனக்கு திருமணமாகிவிட்டது, ஆனால் நாம் நண்பர்களாக இருக்கலாம்” என்று கூறுவது போல காட்டப்பட்டது. ராமாயணம் மற்றும் அதன் பாத்திரங்களின் புனிதத்தன்மையின் இத்தகைய அப்பட்டமான புறக்கணிப்பும் ஒரு மதத்தின் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் அரங்கேற்றப்பட்டது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நமது இராமாயண காவியத்தை அவதூறாக சித்தரித்து நாடகம் அரங்கேற்றிய மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை கைது செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என புதுச்சேரி இந்து அமைப்பினர், சிவனடியார்கள் கூட்டம், பாண்டுரங்க பஜனை குழு மற்றும் பரிவார் இயக்கங்கள் கலந்து கொண்டு, இந்துமுன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது… ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்…
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் துடைப்பம் ஏந்தி ஆண்கள் செருப்பு ஏந்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்..!!