ஆர்.எஸ்.எஸ். பற்றி அவதூறு : மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு !

ஆர்.எஸ்.எஸ். பற்றி அவதூறு : மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு !

Share it if you like it

“மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதையே தாரக மந்திரமாக 99 வருடங்களாக தன்னலமற்ற சேவையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது செய்து வருகிறது. அடுத்த ஆண்டில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமானது வெற்றிகரமாக அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகி வருகிறது.

எத்தனையோ அமைப்புகள் ஆரம்பித்து அடையாளம் இல்லாமல் அழிந்து போய் உள்ளது. காரணம் அந்த அமைப்பினுடைய சித்தாந்தம் சரியில்லாமல் இருக்கும் இல்லை எனில் அதன் தலைவர்கள் சரியில்லாமல் இருப்பார்கள். இதனாலேயே பல அமைப்புகள் காணாமல் போன வரலாறு நமக்கு தெரியும்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்போ 1925 ல் ஆரம்பித்து எண்ணற்ற தடைகளையும் இன்னல்களையும் கடந்து இன்று வரை கம்பீரமாக வீறு கொண்டு நிற்கிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது தவறான கருத்துக்களை பரப்பி வருகிறது. இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில ஊடகத்துறை செயலாளர் பா.நரசிம்மன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

ஆர்.எஸ்.எஸ். பற்றி ஏராளமான வதந்திகளையும் அவதூறுகளையும் சமூக விரோதிகள் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். சங்கம் இது போன்ற அவதூறுகளுக்கு பதிலளிப்பது இல்லை என்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்து வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திருமதி வாசுகி, ஆதாரமற்ற ஒரு அவதூறைப் பரப்பியுள்ளார்.

புது தில்லியில் 3.5 லட்சம் சதுர அடியில் ரூ. 4500 கோடி செலவில் சங்கத்தின் பிரமாண்ட அலுவலகம் கட்டப்படுவதாக பொய்யான பிரசாரத்தை திருமதி வாசுகி ஆரம்பித்துள்ளார்.

இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

எந்தவித ஆதாரமும் இன்றிப் பரப்பப்படும் இந்த பொய்க் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திட்டமிட்ட அவதூறைப் பரப்பும் திருமதி வாசுகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்வோம் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share it if you like it