இரட்டை அர்த்தத்துடன் பேசும் ஆபாச வசனங்கள் முகத்தை மட்டுமல்ல, காதையும் கூச வைப்பது தான் ‘திராவிட மாடல்’ – நாராயணன் திருப்பதி !

இரட்டை அர்த்தத்துடன் பேசும் ஆபாச வசனங்கள் முகத்தை மட்டுமல்ல, காதையும் கூச வைப்பது தான் ‘திராவிட மாடல்’ – நாராயணன் திருப்பதி !

Share it if you like it

“யாருக்கு எதிராகக் கட்சி தொடங்கினோரோ, அவருக்கே வாக்கு கேட்டு வலம் வரும் அவலத்துக்குத் தள்ளப்பட்டு விட்டார் புதுவை முதல்வர் ரங்கசாமி” என்று மு. க. ஸ்டாலின் புதுவை முதல்வர் ரங்கசாமியை விமர்சித்து பேசி இருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, முத்துவேல் கருணாநிதியின் மகனான உங்களுக்கு எதிராக கட்சி தொடங்கிய வை.கோ. வின் கட்சிக்கே வாக்குகளை கேட்டு வலம் வரும் இந்த அவல நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டது ஏன் ஸ்டாலின் அவர்களே? என்று அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் ஆறு மாசம் வீட்டில இருங்க, கடைகளை இழுத்து மூடுங்க, வெளில வந்தா கைதுனு சொன்னாரு, எல்லாரும் கைல விளக்கு பிடிச்சிக்குங்க, ஒரு கைல விளக்கு பிடிங்க, ஒரு கைல மணியடிங்க, சத்தம் போடுங்கனு மோடி சொன்னாரா இல்லையா?” என்று திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் மக்களிடையே அருவருக்கத்தக்க வகையில் கொச்சையாக பேசினார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, ஒரு கைல விளக்கு பிடித்து, ஒரு கைல மணியாட்டுபவர்கள், பிரதமர் விளக்கேற்ற சொன்னதை, விளக்கு பிடிக்கச் சொன்னதாக புரிந்து கொள்வதிலும், கை தட்டி ஒலி எழுப்பி முன்களப்பணியாளர்களை பாராட்டச் சொன்னதை, ஒரு கைல மணி அடிக்க சொன்னதாக சொல்லி மகிழ்வதிலும் வியப்பில்லை.

‘முத்துவேல் கருணாநிதியின் பேரன், என்று பெருமை பேசும் இந்த நபர் சைகைகளோடு, இரட்டை அர்த்தத்துடன் பேசும் ஆபாச வசனங்கள் முகத்தை மட்டுமல்ல, காதையும் கூச வைப்பது தான் ‘திராவிட மாடல்’.

ஆபாசமே உன் பெயர் தி மு கவா?


Share it if you like it