தேவக்கோட்டை படுகொலை தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் – மறைக்கப்பட்ட வரலாறு

தேவக்கோட்டை படுகொலை தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் – மறைக்கப்பட்ட வரலாறு

Share it if you like it

தேவகோட்டை

“வெள்ளையனே வெளியேறு” என்ற போராட்டத்திற்கு மகாத்மா காந்தி அவர்கள், ஆகஸ்ட் 9, 1942 ஆம் ஆண்டு அன்று, அறைகூவல் விடுத்தார். அதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் முன்பாக ஆகஸ்ட் 16, 1942 ஆம் ஆண்டு அன்று “ஆகஸ்ட் புரட்சி” நடைபெற்றது. காந்திஜி காட்டிய வழியை பின்தொடர வேண்டும் என, 21 வயதே நிரம்பிய அண்ணாமலை அவர்கள், தேவகோட்டை ஜவகர் மைதானத்தில் நடந்த பெருந்திரள் கூட்டத்தில் எழுச்சி உரை ஆற்றினார்.

அப்போதே அண்ணாமலை மற்றும் ராமநாதனை கைது செய்ய, போலீஸ் முயற்சி செய்தது. ஆனால், அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்,  அவரை பாதுகாத்தனர். பின்னர், நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டு, திருவாடானை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் போகும் வழியிலேயே, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு வழி மறித்தனர், சிறைச்சாலையை தாக்கினர். கூட்டத்தை கலைக்க போலீசார் பெரிதும் முயற்சி செய்தது.

அவர்கள் குடியிருந்த போது, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, திடீரென போலீசார் சுட்டனர். அதில் 21 வயதே நிரம்பிய தர்மராஜன், 18 வயதே நிரம்பிய கிருஷ்ணன், வயதான மூதாட்டி உட்பட 120 பேர் ஆங்கிலேயர்களால் சுடப்பட்டு உயிர் நீத்தனர், பலர் காயமடைந்தனர். 112 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அண்ணாமலை அவர்களை, அங்கு குழுமியிருந்த மக்கள் அரண் அமைத்து பாதுகாத்தனர்.

அண்ணாமலை அவர்களை பிடித்து தருபவர்களுக்கு, ஆங்கிலேயர்கள் அன்றைய காலகட்டத்திலேயே பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. பின்னர், அண்ணாமலை அவர்கள் மற்றவர்களை பாதுகாக்க எண்ணி, போலீசாரிடம் சரண் அடைந்தார். போலீஸ் அவரை அடித்து துன்புறுத்தியது. ஒவ்வொரு முறை போலீஸார் அடிக்கும் போதும் அவர் “வந்தே மாதரம்” என கோஷமிட்டு கொண்டிருந்தார். சிறைச்சாலையில் நான்கரை வருடம் உள்ளே இருக்க வேண்டும் என, கோர்ட் தீர்ப்பு வந்தது. ராஜாஜியின் முயற்சியால், தண்டனை காலம் குறைக்கப்பட்டு 6 மாதத்திலேயே வெளியே வந்தார்.

ஏற்கனவே பூங்காவாக இருந்த இடத்தை சீராக்கி, சுதந்திர தினமான ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, 1947 ஆம் ஆண்டு அன்று, உயிர் நீத்த வர்கள் நினைவக, நினைவுச் சின்னம் எழுப்பப் பட்டு, “தியாகிகள் பூங்கா” என அழைக்கப் பட்டது. அந்த தெருவிற்கு, “தியாகிகள் தெரு” எனவும் பெயரிடப் பட்டது.


Share it if you like it