பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் !

பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் !

Share it if you like it

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய, தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து பேசினார். அப்போது, பொதுவாக “கோ மூத்ரா” மாநிலங்கள் என்று அழைக்கப்படும் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற முடியும் என்று கூறினார். ஆனால், தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானாவில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று பேசினார்.

திமுக எம்.பி. செந்தில்குமாரின் பேச்சுக்கு பாஜக உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்துடன் பகிரப்பட்டது. இந்நிலையில், தனது கருத்துக்கு திமுக எம்.பி. செந்தில்குமார் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய போது, தவறான பொருள் அளிக்கும் வகையில், ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த சொல்லை உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை என்று திமுக எம்.பி. செந்தில்குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அது தவறான பொருள் தருவதால், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்பதாக செந்தில்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share it if you like it