ஹிந்து சம்பிரதாயத்தை அவமதித்த தர்மபுரி தி.மு.க. எம்.பி.!

ஹிந்து சம்பிரதாயத்தை அவமதித்த தர்மபுரி தி.மு.க. எம்.பி.!

Share it if you like it

ஹிந்து சடங்கு சம்பிரதாயங்களை அவமதித்த தர்மபுரி தி.மு.க. எம்.பி. செந்தில்குமாருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

தி.மு.க. ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்பதுதான் ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகளின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், அவ்வப்போது சில சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. உதாரணமாக, தி.மு.க. தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றபோது, அர்ச்சகர்கள் நெற்றியில் இட்ட விபூதி, குங்குமத்தை அங்கேயே அழித்து அவமானப்படுத்தினார். மேலும், இஸ்லாமிய திருமணத்திற்குச் சென்றிருந்த ஹிந்து திருமண சடங்குகளைப் பற்றி அவதூறாகப் பேசி அசிங்கப்படுத்தினார்.

அதேபோல, ஸ்டாலின் தங்கையும், மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி எம்.பி., திருப்பதி கோயிலில் உண்டியலை காப்பற்றிக் கொள்ள முடியாமல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், அந்த வெங்கடாஜபதியா மக்களை காப்பாற்றப் போகிறார் என்று பொதுக்கூட்டத்தில் பேசி, ஹிந்து கடவுளை அவமானப்படுத்தினார். இப்படி, தி.மு.க.வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பலரும் ஹிந்து கடவுள்களையும், ஹிந்து மத சடங்குகளையும் அசிங்கப்படுத்துவதையும், அவமானப்படுத்துவதையும், அவதூறாகப் பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில்தான், தி.மு.க.வைச் சேர்ந்த தர்மபுரி தொகுதியின் எம்.பி. செந்தில்குமார், ஹிந்து மத பூஜையை அவமதித்திருக்கிறார். அதாவது, தர்மபுரியில் ஒரு ஏரியை சீரமைப்பதற்காக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விழாவுக்கு தர்மபுரி எம்.பி. என்கிற முறையில் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி. செந்தில்குமாரை அழைத்திருக்கிறார்கள். அவரும் வந்திருக்கிறார். அப்போது, வழக்கமாக அரசு விழாக்களில் செய்யப்படுவதுபோல, அந்த விழாவிலும் சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் செந்தில்குமாரோ, வந்தோமா விழாவை சிறப்பித்தோமா என்றில்லாமல், பொங்கி எழுந்து விட்டார்.

எப்படி ஹிந்து மதப்படி மட்டும் பூஜை செய்யலாம்? கிறிஸ்தவ பாதிரியாரை கூப்பிடுங்கள். இஸ்லாமிய இமாமை கூப்பிடுங்கள் என்றபடியே தய்யா தக்க என்று வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்க ஆரம்பித்து விட்டார். இதனால், அதிகாரிகள் ஏன்டா இவரை அழைத்தோம் என்று நொந்து கொண்டனர். பின்னர், பூஜைகளை நிறுத்திவிட்டு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். பின்னர், தான் ஏதோ சாதித்துவிட்டதைப் போல தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள்” என்று தெனாவெட்டாக பதிவும் போட்டிருக்கிறார் செந்தில்குமார். அதேசமயம், செந்தில்குமாரின் இந்த அடாவடி நடவடிக்கைகள் அனைத்தையும், அங்கிருந்து ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் செய்து விட்டார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்து விட்டு ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும் வெகுண்டெழுந்து விட்டனர். பெரும்பான்மையான ஹிந்துக்களின் ஓட்டை வாங்கி எம்.பி.யான செந்தில்குமார் ஹிந்து மத சடங்குகளை அவமதிப்பதா என்று குமுறுகின்றனர். மேலும், அடுத்த தேர்தலில் இதற்கான தண்டனையை செந்தில்குமார் அனுபவிப்பார். அதற்கான தக்க பாடத்தை புகட்டுவோம் என்று சபதம் ஏற்றிருக்கிறார்கள். தவிர, செந்தில்குமாரின் இத்தகைய விரும்பதகாத செயல்பாட்டை, தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம், கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “இது முற்றிலும் தேவையற்ற கோவம். உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களின் திருமண விழா, வீடு கிரஹப்பிரவேசம், பதவியேற்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் இதுபோன்ற சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்படுவதில்லை என்பதை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதால் அவர்கள் எல்லா மத சடங்குகளையும் நிராகரித்துவிடுவார்கள் என்று திராவிட உச்ச நிலைகள் தவறாக நினைக்கின்றன” என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.

மேலும், திரைப்பட இயக்குனர் பேரரசு ஒருபடி மேலே போய் மதம் மாறிகளின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும் என்கிற ரீதியில் கவிதை நடையில் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சாமிக்கு செருப்பு மாலை, பூணூல் அறுப்பு, தாலி அறுப்பு, பூமி பூஜை தடுப்பு என மாடல் மாடலா போயிட்டு இருக்கு! இப்படி சமூகநீதி பேசுபவர் சிலரின் மனைவியோ, தங்கையோ இறக்கும்போது கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்வதை நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது மதம் மாறுனதைக்கூட வெளியில் சொல்ல முடியாத கோழைகள்” என்று விமர்சித்திருக்கிறார். இதேபோல, ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர். அந்த வகையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹெச்.ராஜா, அஸ்வத்தாமன் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.


Share it if you like it