தேசியக்கொடி அவமதிப்பு: தலைமை ஆசிரியைக்கு நோட்டீஸ்!

தேசியக்கொடி அவமதிப்பு: தலைமை ஆசிரியைக்கு நோட்டீஸ்!

Share it if you like it

பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற மறுத்ததோடு, அதற்கு மரியாதையும் செலுத்தாத அரசுப் பள்ளி தலைமை ஆசிரியைக்கு, ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் பேடரஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருபவர் தமிழச்செல்வி. இவர், இப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுளாகப் பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பாரத தேசத்தின் 75-வது சுதந்திர தின நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடியேற்றி கொண்டாடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையேற்று தேசபக்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

அந்த வகையில், தர்மபுரி பேடரஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் சுதந்திர தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தனை ஆண்டுகளாக யார் வேண்டுமானாலும் தேசியக்கொடி ஏற்றலாம் என்று இருந்தவந்த நடைமுறையை மாற்றி, நிகழாண்டு அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கொடியேற்றி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இப்பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தேசியக்கொடியை ஏற்ற மறுத்து விட்டார். இதையடுத்து, உதவி தலைமை ஆசிரியர் முருகன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அப்போது, தேசியக்கொடிக்கு அனைவரும் வணக்கம் செலுத்திய நிலையில், தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி மரியாதை செலுத்தாமல் நின்றிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடுயோ எடுத்த ஒருவர், அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். உடனே, தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, தேசியக்கொடியை அவமதித்த விவகாரம் காட்டுத் தீ போல பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பள்ளிக்கு விரைந்த சில பத்திரிகையாளர்கள், தேசியக்கொடி ஏற்றாதது மற்றும் மரியாதை செலுத்தாதது குறித்து தமிழ்ச்செல்வியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, தான் குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்றும், இயேசுவைத் தவிர யாரையும் வணங்க மாட்டேன் எனவும், கடந்த 4 ஆண்டுகளாகவே தான் கொடியேற்றவும் இல்லை, மரியாதை செலுத்தவும் இல்லை என்று திமிராக பதில் கூறினார்.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரவி, தேசபக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தேசியக்கொடியை அவமதித்த தலைமை ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலத்திலும் புகார்கள் குவிந்தன. இதைத் தொடர்ந்து, தேசியக்கொடி ஏற்றாதது, மரியாதை செலுத்தாதது குறித்து தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வியிடம் விளக்கம் கேட்டு மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இதற்கும் தமிழ்ச்செல்வி விளக்கம் அளிக்கவில்லை. எனவே, விளக்கம் அளிக்காத உங்கள் மீது ஏன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு, மாவட்ட கல்வி அலுவலகம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. எனவே, தேசியக்கொடியை அவமதித்ததோடு, விளக்கமும் அளிக்காமல் திமிர்தனமாக இருக்கும் தலைமை ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசபக்தர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.


Share it if you like it