டிராக்டர் ஏற்றி வி.ஏ.ஓ.வை கொல்ல முயற்சி: தி.மு.க. அரசில் தொடரும் அட்டூழியம்!

டிராக்டர் ஏற்றி வி.ஏ.ஓ.வை கொல்ல முயற்சி: தி.மு.க. அரசில் தொடரும் அட்டூழியம்!

Share it if you like it

தர்மபுரி மாவட்டத்தில் கனிமவளம் கொள்ளையடிப்பதை தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை டிராக்டர் ஏற்றிக் கொல்ல முயற்சித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மெணசி கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் இளங்கோ. இவருக்கு, அப்பகுதியில் கனிமவளக் கொள்ளை திருடப்படுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, வி.ஏ.ஓ. இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றிருக்கிறார். அப்போது, குண்டல் மடுவு காளியம்மன் கோயில் அருகே, உளிக் கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாக சென்றிருக்கிறது.

இதைக் கண்ட வி.ஏ.ஓ. இளங்கோ, அந்த டிராக்டரை தடுக்க முயன்றிருக்கிறார். அப்போது, அவரை ஏற்றிக் கொலை செய்யும் நோக்கில், அவர் மீது மோதுவதுபோல டிராக்டர் நிற்காமல் சென்றிருக்கிறது. எனினும், இளங்கோ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர், இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தார் இளங்கோ. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, டிராக்டர் உரிமையாளர் ராகவன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ.வை மணல் மாஃபியாக்கள் வெட்டிக் கொலை செய்தனர். அதேபோல, சேலம் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ.வை, மாஃபிக்கள் கொல்ல முயன்றனர். அவர் தப்பி வந்து போலீஸில் சரணடைந்தார். அரசியல் அழுத்தம் காரணமாக வேலை செய்ய முடியவில்லை என்று கூறி அருப்புக்கோட்டை வி.ஏ.ஓ. ராஜினாமா செய்துவிட்டார். தற்போது மற்றொரு வி.ஏ.ஓ.வை கொல்ல முயற்சி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் மூலம் தி.மு.க. அரசில் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவது அப்பட்டமாகத் தெரிகிறது.


Share it if you like it