ஹிந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை மீது தி.மு.க. எம்.பி. செந்தில் தனது அதிருப்தியை காட்டி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா தொற்று தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடிய போது, ஹிந்து கோவில்களுக்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகளை தி.மு.க. அரசு விதித்தது. மற்ற வழிப்பாட்டு தலங்களுக்கு கொடுக்கும், முக்கியத்துவத்தை ஏன்? ஹிந்து ஆலயங்களுக்கு கொடுக்க தி.மு.க. அரசு மறுக்கிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். இன்னும், 10 நாட்களுக்குள் கோவிலை திறக்கவில்லை எனில் போராட்டம் வெடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்த பிறேக தி.மு.க. அரசு அடி பணிந்தது.
இப்படியாக, ஹிந்துக்கள் தங்களது உரிமைகளை விடியல் ஆட்சியில் போராடி பெற வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதுதவிர, கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்தில், 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், திருமாவளன், வன்னியரசு மற்றும் தி.மு.க.வை சேர்ந்த ஆபாச பேச்சாளர்கள் என பலர் ஹிந்து ஆலயங்களை இழிவுப்படுத்தியும், அவமதிப்பும் செய்து வருகின்றனர்.
மேற்கூறிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து முன்னணி, பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் காவல்துறையில் புகார் தெரிவித்து இருந்தன. ஆனால், விடியல் அரசு இதுவரை அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. இப்படியாக, ஹிந்துக்களின் உணர்வுகள் ஸ்டாலின் ஆட்சியில் தொடர்ந்து காயப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறையை தி.மு.க.வை சேர்ந்த தர்மபுரி எம்.பி. செந்தில் சாடி இருக்கிறார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்து இருக்கிறார்.
“இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல” – கலைஞர். சொன்னது கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம் என குறிப்பிட்டு இருக்கிறார்.
என்ன விதமான வாதம் இது! சொத்துகளை நிர்வகிக்கும் அமைப்பு வாழ்த்து செய்தி சொல்லக்கூடாதென்றால், ஆவின் பால் பக்கெட்டில் ஏன் மற்ற மதம் சார்ந்த பண்டிகை காலங்களில் வாழ்த்து சொல்லி ப்ரிண்ட் செய்கிறார்கள்? மதசார்பின்மை, மத நல்லிணக்கம் இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என இணையதளவாசி ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஹிந்துக்களின் பண்டிக்கைக்கு, வாழ்த்து கூட சொல்ல மனமில்லாத இவருக்கு, ஓட்டு போட்டு வெற்றி பெற செய்த ஹிந்துக்கள் இவரின் வக்கிர புத்தியை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.