கேள்வியா கேட்குற… பொதுமக்களை ஆபாசமாகத் திட்டி அடிக்க பாய்ந்த தி.மு.க. ஊ.ம. தலைவிகளின் கணவர்கள்!

கேள்வியா கேட்குற… பொதுமக்களை ஆபாசமாகத் திட்டி அடிக்க பாய்ந்த தி.மு.க. ஊ.ம. தலைவிகளின் கணவர்கள்!

Share it if you like it

கிராமசபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட பொதுமக்களை, ஊராட்சி மன்றத் தலைவிகளின் கணவர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக தண்ணீர் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடந்தது. அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள 251 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடந்தன. பாலக்கோடு தாலுகாவிலுள்ள காட்டம்பட்டி, கெண்டேனஹள்ளி ஆகிய ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடந்தன. இக்கூட்டத்தில், வரவு செலவு கணக்கு, குடிநீர் பிரச்னை, சாக்கடை கால்வாய், தெரு விளக்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பெண் தலைவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. மாறாக, ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்கள் கேள்வி கேட்ட பொதுமக்களை தகாத வார்த்தைகளாலும், ஆபாசமாக வார்த்தைகளாலும் திட்டியதோடு, தாக்கவும் செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் பெண்கள் தலைவர்களாக இருக்கும் ஊராட்சி மன்றங்கள் மட்டுமல்லாது ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி மேயர் வரை அவர்களது கணவர்களின் தலையீடு அதிகரித்து வருகிறது. இதை தமிழக அரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Share it if you like it