ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து நாம் தமிழர் சீமானுடன் இயக்குனர் பாரதி ராஜா முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய விவகாரம் பொதுத்தளத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று போராடி தியாகிகள் பெனிஷன்கூட முறையாக போய்சேராத பல தியாகிகள் வறுமையில் இன்றும் வாடி வருகின்றனர். ஏன் முன்னாள் பிரதமர் திரு ராஜிவ்காந்தி கொலைசெய்யப்பட்ட பொழுது அவருடன் குண்டு வெடிப்பில் பல தமிழர்கள் இறந்தனர். பலரும் இன்றுவரை ஊனமடைந்து, உடல்பாகங்கள் சிதைந்த நிலையில் கண்ணீரோடு வாழ்ந்து வருகின்றனர் ஆனால் அவர்களின் நல்வாழ்வு குறித்து பாரதிராஜா ஒரு முறையாவது முதல்வரை சந்தித்ததுண்டா..? தொழிலில் சற்று சரிவு வந்தாலோ அல்லது மார்க்கெட் இல்லாமல் போனாலோ உடனே தவறான விஷயங்களுக்கு குரல் கொடுத்து தங்களை ஏதோ போராளி போல் காட்டி கொள்வது சில பிரபலங்களுக்கு இப்பழுது பேஷனாகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.