இந்திய ராணுவத்தின் வீரத்தை குறைக்க மதமாற்று சக்திகள் முயற்சியா?

இந்திய ராணுவத்தின் வீரத்தை குறைக்க மதமாற்று சக்திகள் முயற்சியா?

Share it if you like it

 

இந்திய ராணுவம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொழுது, போர் குணத்தை ஏற்படுத்த சில பண்பாடு சார்ந்த கோஷங்கள் எழுப்புவது வழக்கம்.

  • ஜம்மு காஷ்மீர் ரெஜிமென்ட் “துர்கா மாதா கி ஜெய்”
  • ஜாட் ரெஜிமென்ட் “ஜாட் பல்வான், ஜெய் பக்வான்”
  • ராஜ்புத் ரெஜிமென்ட் ” ஜெய் பஜ்ரங் பலி கி ஜெய்”

ராஜ்புதானா ரெஜிமென்ட் ” ராஜா ராம்சந்திர கி ஜெய்”
என இது போன்ற பல கோஷங்களை எழுப்புவது வழக்கம். அது போல “வெற்றிவேல், வீரவேல்” என்ற கோஷமும் நமது இந்திய ராணுவத்தில் மிக பிரபலம். குறிப்பாக கோவையில் உள்ள ராணுவ படைத்தள நுழைவு வாயிலில் இந்த கோஷம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மீது கண்வைத்த நேஷனல் கோன்பிட்ரேஷன் ஆப் ஹியூமன் ரயிட்ஸ் எனும் அமைப்பு, ராணுவத்தில் மதம் சார்ந்த கோஷங்கள் இருக்க கூடாது அவற்றை உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

“மதச்சார்பின்மை என்பது சிறுபான்மையினர் நலத்திற்கானதே தவிர. மண் சார்ந்த பண்பாட்டு இயல்புகளை மாற்றுவதற்கானது அல்ல, ராணுவத்தில் போராடும் ஒரு ராணுவ வீரன் தன் பண்பாடு சார்ந்த கோஷங்களை எழுப்பும் போதுதான், அவனுக்கு இயல்பான போர் குணம் எழுச்சி பெரும் அப்படி இருக்கையில், சில தேச விரோத அமைப்பினரும், வெளிநாட்டு நிதி பெரும் மிஷனரிகளும் இந்த விஷயத்தில் மத பிரச்னையை இழுத்துவிடுவது நல்லதல்ல” என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

சமீபத்தில் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் என்ற பெயரில் செயல்பட்டு வந்த அமைப்பு கிறிஸ்தவ மதத்தை பரப்பியதாக குற்றச்சாட்டில் சிக்கியது. இது போன்ற பொதுவான பெயரில் அமைப்புகளை துவங்கி மதம் மற்றும் சதி வேலைகளில் பல அமைப்புகள் ஈடுபட்டு வருகிறது. அதே போல் தற்பொழுது இந்த விவகாரத்தை கிளப்பி உள்ள நேஷனல் கோன்பிட்ரேஷன் ஆப் ஹியூமன் ரயிட்ஸ் எனும் அமைப்பும் அவற்றில் ஒன்றாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்பொழுது மக்களுக்கு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Share it if you like it