Additional Deposit கொதிப்பில் தமிழக மக்கள்..!

Additional Deposit கொதிப்பில் தமிழக மக்கள்..!

Share it if you like it

கொரோனா தொற்றின் கோர தாண்டவம் காரணமாக, வருமானமின்றி பல ஏழை குடும்பங்கள் இன்று வரை கடும் இன்னல்களையும், வேதனைகளையும், சந்தித்து வருகின்றனர்.

கூலி தொழிலாளிகள் மற்றும் ஏழை, எளியவர்களிடம், இருக்கும் பணத்தை மதுக்கடைகள் மூலம் தமிழக அரசு பறிக்கின்றது என பெண்கள், சமூக ஆர்வலர்கள், உட்பட பலரும் தங்களின் கோவத்தையும், அதிருப்தியையும், வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பலருக்கு மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பயன்பாடு அதிகரித்த காரணத்தினால் Additional Deposit (ACCD) சுமார் Rs 4,000 வரை கூடுதலாகச் சேர்த்து கரண்ட் பில் அனுப்பியுள்ளதாக பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆளும் தி.மு.க அரசு மீது கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இது போன்ற மக்கள் விரோத செயல்களினால் ஆளும் தி.மு.க அரசின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வாழும் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள், அடுத்த 4 ஆண்டுகளுக்கு மேல் இந்த கொடூரங்களை எப்படி தாக்கு பிடிப்பார்கள் என்பது கேள்விக்குறியே?


Share it if you like it