அரசியல்வாதி போல் பேசுவதற்கா IAS படித்தீர்கள்? கோவை மாவட்ட ஆட்சியருக்கு பிரபல அரசியல் விமர்சகர் செல்வ குமார் கடும் கண்டனம்..! 

அரசியல்வாதி போல் பேசுவதற்கா IAS படித்தீர்கள்? கோவை மாவட்ட ஆட்சியருக்கு பிரபல அரசியல் விமர்சகர் செல்வ குமார் கடும் கண்டனம்..! 

Share it if you like it

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மற்றும் மத்திய மாநில அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டபணிகளை ரத்து செய்யகூடாது, தொகுதிகளில் நடைபெறும் அரசு பணிதுவக்க நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை, அ.தி.மு.க சட்டமன்ற கொறடா எஸ்.வி வேலுமணி தலைமையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக சந்தித்து அண்மையில் மனு அளித்தனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் சமீரன் நாற்காலியில் அமர்ந்து கொண்டே மனுவை பெற்றார். இதனால் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தால் எழுந்து நின்று மனுக்களை வாங்குங்கள். இது என்ன புது பழக்கம் என கேள்வி எழுப்பினர். அதன் பின்னர் ஆட்சியர் சமீரன் எழுந்து நின்று மனுக்களை பெற்ற சம்பவம் அடங்குவதற்குள்..
கொரோனா தொற்று பாதித்த மக்களுக்கு மத்திய அரசு 60% செலவை செய்யும் பொழுது அனைத்தையும் மறைத்து விட்டு முதல்வர் காப்பீடு என்று  கோவை மாவட்ட ஆட்சியர் பேசியிருப்பதற்கு பிரபல அரசியல் விமர்சகர் செல்வ குமார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.


Share it if you like it