எல்லை மீறும் உ.பி.க்கள் தொல்லை… தண்டவாளத்தில் சிக்கிய பள்ளி குழந்தைகள் வேன்: திக் திக் நிமிடங்கள்..!

எல்லை மீறும் உ.பி.க்கள் தொல்லை… தண்டவாளத்தில் சிக்கிய பள்ளி குழந்தைகள் வேன்: திக் திக் நிமிடங்கள்..!

Share it if you like it

அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்காக ரயில்வே கேட்டை மூட வேண்டாம் என்று அக்கட்சியினர் தடுத்து நிறுத்தியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நடு தண்டவாளத்தில் பள்ளி வாகனம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 13-வது வார்டு பகுதியான ஏத்து நாயக்கர் காலனியில் பூமிபூஜை மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மாவட்டச் செயலாளரும், பழனி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி ஆகியோர் கொடைரோடு வந்தனர். இவர்களை சுமார் 20-க்கும் மேற்பட்ட கார்களில் சென்று வரவேற்புக் கொடுத்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள், அரசு நிகழ்ச்சி நடக்கும் ஏத்து நாயக்கர் காலனிக்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்த வழியில் ரயில்வே கிராசிங் ஒன்று இருக்கிறது. எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகளின் கார்கள் அணிவகுந்த வந்து கொண்டிருந்தபோது, மாலை சுமார் 6:20 மணிக்கு நெல்லையில் இருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக சிக்னல் கொடுக்கப்பட்டு, அலாரம் எச்சரிக்கை ஒலித்தபடியே ரயில்வே கேட்டை அடைத்துக் கொண்டிருந்தார் கேட் கீப்பர். ஆனால், கும்பலாக வந்த தி.மு.க.வினர் எம்.பி., எம்.எல்.ஏ. வருவதாகக் கூறி கேட்டை அடைக்க விடாமல் தடுத்தனர். இதனால் கேட்டை அடைத்துக் கொண்டிருந்த கேட் கீப்பர் கேட்டை பாதியிலேயே நிறுத்தினார்.

இதையடுத்து, எம்.எல்.ஏ., எம்.பி.யின் கார்ளும், கட்சி நிர்வாகிகளின் கார்களும் சென்றன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இதர வாகனங்களும் ரயில்வே கேட்டை கடக்க முயன்றன. இதனால் ரயில்வே கிராசிங்கிள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில், தாதர் எக்ஸ்பிரஸ் வரும் நடு தண்டவாளத்தில் பள்ளி வாகனம் சிக்கிக்கொண்டது. இதனைக் கண்டு கேட் கீப்பர் உட்பட அப்பகுதி மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், ரயில் வருவதற்கு சிறிது நிமிடமே இருந்த நிலையில், அங்கிருந்த போலீஸார், போக்குவரத்தை சீர் செய்து பள்ளி வாகனத்தை வெளியேற்றினர்.

பின்னர், கேட் மூடப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக ரயில்வே கேட்டை கடந்து சென்றது. ரயில்வே அடைக்க விடாமல் தண்டவாளத்தை கடந்த தி.மு.க.வினரால் மிகப்பெரிய விபத்து ஏற்படவிருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் முயற்சியால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி நிலையில், தி.மு.க.வினரின் அராஜகப்போக்கை பலரும் கண்டித்து வருகின்றனர்.


Share it if you like it