கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை அருகே வேங்கைவாசலில் பல நலத்திட்ட உதவிகளை ஏழைகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் எக்கசக்க கோல்மால்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 புதிய ஆட்டோக்களையும், இரண்டு அமரர் ஊர்திகளையும் மக்களுக்கு கொடுத்துள்ளனர். ஆனால் அந்த 4 ஆட்டோக்களும், 2 அமரர் ஊர்திகளும் பழையது என்றும் ஏற்கனவே யாரோ ஒருவர் பயன்படுத்தியதை பட்டிங் டின்கரிங் செய்து கொஞ்சம் பாலிஷ் செய்து மிக அருமையாக மக்களையே ஏமாத்தியுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த தில்லாலங்கடி வேலையை செய்தது ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் என்று கூறப்படுகிறது. இதைப்பற்றி ஜெயச்சந்திரன் தரப்பில் கேட்டபொழுது “கோழி குருடா செவுடா ன்னு பாக்காதீங்க, குழம்பு ருசியா இருக்கானு பாருங்க, ஆட்டோவும் அமரர் ஊர்தியும் ஓடுதில்ல அப்புறம் என்ன ? இவ்வாறு நக்கலாக பதில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

ஏழை மக்களின் நலத்திட்ட நிகழ்ச்சியில் பட்டிங் டிங்கரிங் செய்து தில்லாலங்கடி வேலை பார்த்த திமுகவினர் !
Share it if you like it
Share it if you like it