தி.மு.க. அரசின் மெத்தன போக்கினால் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் மழை நீரில் நனைந்து வீணாகி இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விடியல் ஆட்சியில் லஞ்சம், லாவண்யம் தலைவிரித்து ஆடி வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. இதுதவிர, அடிமட்டத்தில் தொடங்கி மேல் மட்டம் வரை கையூட்டு கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்ற நிலை தற்போது தமிழகத்தில் எழுந்துள்ளது. இதுதவிர, தி.மு.க. ஆட்சியில் நடக்கும் அவலங்களை தமிழக பா.ஜ.க. தலைவர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், கரூரில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் அறிவாலய கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்ட பணியினால் அரசுக்கு 1.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் மழையில் நனைந்து வீணாகி இருக்கின்றன.
கமிஷனில், குறியாக இருக்கும் இந்த அறிவாலய அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யப் புத்தக விற்பனையாளர்களுக்குத் தகுந்த நஷ்ட ஈடு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். படகில் சென்று புத்தக கண்காட்சியை கரூர் மக்கள் காண வேண்டும் என தி.மு.க. அரசு எடுத்து இருக்கும் புதிய முயற்சியை அண்ணாமலை பாராட்ட வேண்டுமே தவிர விமர்சனம் செய்ய கூடாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜ.க. தலைவரின் ட்விட்டர் பதிவு இதோ.