டாய்லெட் பேப்பரை பயன்படுத்துவோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – அண்ணாமலை!

டாய்லெட் பேப்பரை பயன்படுத்துவோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – அண்ணாமலை!

Share it if you like it

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான முரசொலிக்கு மீண்டும் மரண பதிலடியை கொடுத்துள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

1959-ல் நம்பூதிரி பாத் ஆட்சியை கலைத்தவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற சி.பி.ஐ.எம் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசி இருந்தார். இதற்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தோடு மட்டுமில்லாமல், மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் என்று குறிப்பிட்டு இருந்தார். எந்த சரித்திரமும் தெரியாமல் எதுவும் புரியாமல் யாரோ எழுதி கொடுத்ததை பேசி வருகிறார். இதன்காரணமாக, தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் தொடர்ந்து தலைகுனிவு ஏற்பட்டு வருகிறது. இதைபார்த்து, அனைத்து மாநிலங்களும் சிரிக்கின்றன. வெறும் அரசியல் லாபத்திற்காக இதுபோன்று முதல்வர் பேசி வருகிறார் என அண்ணாமலை மிக கடுமையாக சாடியிருந்தார்.

அண்ணாமலையின் நியாயமான கேள்விக்கு பதில் அளிக்காமல், வழக்கம் போல முரசொலி தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தது. கருத்து வேறுபாடு, கொள்கை வேறுபாடு, கட்சி வேறுபாடு என ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், மாற்று கட்சியை சேர்ந்தவர்களுக்கு கண்ணியமான முறையில் பதில் அளிக்க வேண்டும் என்பதே பத்திரிக்கை தர்மம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர், முரசொலிக்கு பா.ஜ.க தலைவர் இவ்வாறு பதிலடி கொடுத்து இருந்தார். தமிழில் தினசரி நாளிதழ் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் ’டாய்லெட் பேப்பருக்கு தகுதியான செய்தித்தாள்.. இது முரசொலி என்று தமிழ்நாட்டில் அழைக்கப்படுகிறது. கேரளாவில் ஈ.எம்.எஸ் நம்பூத்ரிபாட் அரசு ஏன் டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்பதற்கான எனது வீடியோவையும் நான் பேசியதற்கான ஆதாரத்தையும் தயவுசெய்து பார்க்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து, அண்ணாமலையின் கேள்விக்கு பதில் கொடுக்க முடியாமல் திணறிய முரசொலி. வழக்கம்போல, பத்திரிக்கை தர்மத்தை மறந்து விட்டு, பா.ஜ.க தலைவரை இழிவுப்படுத்தும் நோக்கில் மீண்டும் செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த வகையில், பா.ஜ.க தலைவர் சிறப்பான பதிலடியை மீண்டும் முரசொலிக்கு இவ்வாறு கொடுத்துள்ளார். தி.மு.க இன்னும் உண்மையை மறைக்க விரும்புகிறது. இ.எம்.எஸ்.நம்பூத்ரிபாத் அரசை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இந்திரா காந்தி அழுத்தம் கொடுத்தார். நான் தி.மு.க.வின் முரசொலி நாளிதழை டாய்லெட் பேப்பர் என்று கூறியதையடுத்து, டாய்லெட் பேப்பரை பயன்படுத்துபவர்கள் பலரும் அதைக் கண்டித்துள்ளனர். கழிப்பறை காகிதங்களைப் பயன்படுத்துபவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it