பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதுபோல சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர் தி.மு.க. உ.பி,ஸ்கள். இதுதான் பா.ஜ.க.வினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
தி.மு.க. உ.பி.ஸ்களுக்கு பொய் பரப்புவதே வாடிக்கையாகி விட்டது. எதிர்க்கட்சியினர் சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதுபோல சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டு குளிர்காய்வதில் கில்லாடிகள். குறிப்பாக, பா.ஜ.க.வினர் சொல்லாத விஷயத்தை எல்லாம் சொன்னதுபோல பொய் பரப்பி வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதுபோல கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
விஷயம் இதுதான்… சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 4 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. இதை எதிர்க்கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டிலுள்ள தி.மு.க. உ.பி.ஸ்களுக்கும், உ.பி.ஸ் ஆதரவு ஊடகங்களுக்கும், கொடுத்தடிமை யூடிப்பர்களுக்கும் பொறுக்க முடியவில்லை. இதனால், தேர்தல் முடிவு வெளியான மறுநாள் முதலே பா.ஜ.க.வுக்கு எதிராக பல்வேறு விஷமப் பிரசாரங்களை செய்து வருகின்றனர்.
உதாரணமாக, 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்காகத்தான் 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய பா.ஜ.க. அரசு உயர்த்தாமல் வைத்திருக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் விலை உயர்த்தப்படும் என்று விஷமப் பிரசாரம் செய்தனர். ஆனால், தேர்தல் முடிந்தும் விலை உயர்த்தப்படாததால், ரிசல்ட்டுக்குப் பிறகு உயர்த்தப்படும் என்று பல்டியடித்தார்கள். ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிறகும் விலை உயர்த்தப்படவில்லை. உடனே. வேறு மாதிரியாக பா.ஜ.க.வுக்கு எதிராக ரியாக்ட் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், பா.ஜ.க. தலைவர்கள் சொல்லாததை எல்லாம் சொன்னதுபோல, சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். அந்தவகையில், பிரியாணி குறித்தும், சிக்கன் குறித்தும் பா.ஜ.க. தலைவர் அண்ணமலை ஒரு கருத்தைச் சொன்னதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டார்கள். ஆனால், இது அப்பட்டமான பொய். உ.பி.ஸின் கட்டுக்கதை என்பதை பா.ஜ.க.வினர் தெளிவுபடுத்தி, உ.பி.ஸ்களின் முகத்தில் கரியை பூசி விட்டார்கள். இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.