விஷ்ணு பிரியா தற்கொலைக்கு யார் பொறுப்பு: வாய் திறப்பாரா குரல் அற்றவர்களின் குரல்?

விஷ்ணு பிரியா தற்கொலைக்கு யார் பொறுப்பு: வாய் திறப்பாரா குரல் அற்றவர்களின் குரல்?

Share it if you like it

விஷ்ணு பிரியாவின் தற்கொலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் என ஊடக நெறியாளர் செந்தில் கூறுவாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன், என் உடலில் கடைசி சொட்டு உயிர் இருக்கும் வரை இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உழைப்பேன் என்று கூறியவர் நெறியாளர் செந்தில். ஆனால், விடியல் ஆட்சியில் நாளுக்கு நாள் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு, பெண்களின் பாதுகாப்பு, கள்ளச்சாராயம், கஞ்சா, ரவுடியிசம் என தமிழகம் அழிவு பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், வேலூரை சேர்ந்த பள்ளி மாணவி விஷ்ணு பிரியா என்பவர் குடிகார தந்தையை திருத்த வேண்டி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இச்சம்பவம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எதற்கெடுத்தாலும், மோடிதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறுபவர் செந்தில். பள்ளி மாணவியின் தற்கொலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும் என கூறுவாரா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. பா.ஜ.க. என்றால் திடீரென உயிர்தெழுவதும், விடியல் ஆட்சி என்றால் மண்ணில் புதைந்து மறைந்து கொள்வதும்தான் குரல் அற்றவர்களின் குணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it