வேலை வாங்கி தருவதாக கூறி கட்சி நிர்வாகியை ஏமாற்றிய கழக கண்மணிகள்.
தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின், தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக இருந்து வருகிறார். இவர், பொறுப்புக்கு வந்த பின்பு பொதுமக்கள் உட்பட தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் வரை, தங்களது உரிமைகளை போராடி பெற வேண்டிய அவல நிலையே இன்று வரை தொடர் கதையாக இருந்து வருகிறது.
இதனிடையே, தி.மு.க நிர்வாகி திருஞானம் என்பவரின் மகன் மாயக் கண்ணனுக்கு, கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி, மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் கிரிஜா மற்றும் அவரது கணவர் ராஜா ஆகியோர் ரூபாய் 3-லட்சம்/- வரை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாகவும், இது குறித்து, கடந்த 23.03.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, கடந்த 25.04.2022 மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் முன்பு தி.மு.க நிர்வாகி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தையே சிறந்த உதாரணம் எனலாம்.
அந்த வகையில், வேலை வாங்கி தருவதாக கூறி, தி.மு.க. ஐ.டி. விங் நிர்வாகியிடம் 18 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு, கழக கண்மணிகள் கம்பி நீட்டி இருக்கும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது. மேலும், விவரங்களுக்கு அது குறித்தான லிங்க் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
