அது வேற வாயி… இது நாற வாயா… ஸ்டாலினை வறுத்தெடுத்த பெண்மணி: வைரலாகும் வீடியோ!

அது வேற வாயி… இது நாற வாயா… ஸ்டாலினை வறுத்தெடுத்த பெண்மணி: வைரலாகும் வீடியோ!

Share it if you like it

அ.தி.மு.க. ஆட்சியில் செய்த நல்ல திட்டங்களை எல்லாம் ரத்து செய்து விட்டு, ஓசியில் பஸ் விடுறது பெரிய விஷயமா? என்று பெண்மணி ஒருவர் கேள்வி எழுப்பி இருப்பதோடு, இது வேற வாய், அது நாற வாயா என்று ஸ்டாலினை வசைபாடி இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு ஏராளமான நல்ல பல திட்டங்களை செயல்படுத்தினார்கள். குறிப்பாக, இலவச லேப்டாப், தாலிக்கு தங்கம், திருமணத்தின்போது 50,000 ரூபாய் ரொக்கம் என வாரி வழங்கினார் ஜெயலலிதா. ஆனால், அத்திட்டங்களை எல்லாம் ரத்து செய்து விட்டு, இலவச பஸ் பயணத்தை அறிவித்திருக்கிறார் ஸ்டாலின். இலவச பஸ் விடுறது பெரிய விஷயமா? தேர்தல்ல ஜெயிக்கிறதுக்காக என்னென்னமோ வாக்குறுதி எல்லாம் குடுத்தாரு. அதெல்லாம் செஞ்சாரா ஸ்டாலின். அது வேற வாயி, இது நாற வாயா?” என்று வறுத்தெடுத்திருக்கிறார்.

இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it