ஆட்சியில் இல்லாத பொழுதே, தி.மு.க உறுப்பினர்கள். மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள். எவ்வளவு தொல்லை கொடுக்க முடியுமோ, அவ்வளவு தொல்லையை தமிழக. மக்களுக்கு இன்று வரை கொடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.
பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் ஏதேனும், ஒரு தவறு நடந்து விட்டால். ஒட்டு மொத்த அறம் அற்ற கைக்கூலி ஊடகங்கள், காசு பார்க்கும் போராளிகள், முதற்கொண்டு தங்களின் வன்மத்தை இன்று வரை வெளிப்படுத்தி வருகின்றனர். திமுகவோ அல்லது அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த நபர்களோ ஏதேனும் ஒரு தவறு செய்தால் அது குறித்து வாய் திறக்காமல் மெளனம் காப்பது வாடிக்கையாக உள்ள நிலையில்.

தாம்பரம் செம்பாக்கத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. தந்தை இல்லை. தாய் மற்றும் தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். 7-ம் வகுப்பு வரை மட்டும் படித்து உள்ளார். அதே பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் தனசேகரன். சிறுமியை சீரழித்த சம்பவம் தமிழகம் முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது தலைமறைவாக உள்ள, தி.மு.க பிரமுகர் தனசேகரன் மற்றும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.