சமீபத்தில் தமிழகத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சரும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள் விழாவில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இன்று சனாதான தர்மத்தை எதிர்ப்போம் என்று பேசுவதெல்லாம் சரியாக இருக்காது. அழித்து ஒழிப்பது தான் சரியான தீர்வாக இருக்கும் அந்த வகையில் இந்த தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றதோடு எப்படி டெங்கு மலேரியா கொரோனாவை எதிர்க்காமல் அழித்து ஒழிக்க ஒன்று திரண்டு போராடினமோ? அதே போல சனாதனத்தையும் ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தார். உதயநிதியின் இந்த பேச்சை இந்து அறநிலையத்துறை அமைச்சர் மேடையில் இருந்து கைதட்டி ரசித்ததும் இந்த நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி கொடுத்ததும் அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டதும் பல்வேறு சட்ட ரீதியான கேள்விகளை விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் உதயநிதியின் பேச்சும் அதை இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆமோதித்த விதமும் தமிழகத்தில் கடந்து ஒட்டுமொத்த தேசம் முழுவதிலும் இந்து மக்கள் அமைப்புக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. கண்டனங்கள் விமர்சனங்கள் என தொடங்கி சட்ட நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ராஜஸ்தானில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உதயநிதியின் இந்த பேச்சை கண்டித்ததோடு இதற்கு நிச்சயமாக சட்ட நடவடிக்கை தேவை என்றும் பேசினார் . இதற்கு பதில் அளிக்கும் விதமாக உதயநிதி நான் கலைஞரின் பேரன் . பெரியார் அண்ணா வழியில் நடப்பவன். இந்த காவிகளின் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். நான் சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கிறேன் . நிச்சயமாக சனாதனம் அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்று தன் கருத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். தமிழகத் திரைப்படத் துறையில் இயக்குனர் நடிகர் மற்றும் ஆர்வலர்கள் திக அமைப்பினர் உள்ளிட்ட பலரும் உதயநிதி இந்த பேச்சுக்கு ஆதரவு தரும் வகையில் அவர்களும் சனாதன எதிர்ப்பு கருத்துக்களை வெளிப்படையாக பேசத் தொடங்கினார்கள். கர்நாடகா – ஆந்திரம் தொடங்கி வட இந்தியா முழுவதிலும் உதயநிதியின் குடும்ப தொலைக்காட்சி நிறுவனமான சன் டிடிஎச் மீது கடும் வெறுப்பும் அவரவர் வீடுகளில் இருக்கும் டிடிஎச் கருவிகளை அடித்தும் உடைத்தும் மக்கள் பெரும் கொந்தளிப்பில் ஈடுபடுகிறார்கள்.
தமிழகம் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு மட்டத்திலும் எதிர்ப்புகள் ஏற்படுவதை கண்ட திமுகவினர் உதயநிதியின் இந்த பேச்சை பாஜகவினர் திரித்து பேசுவதாக விஷம கருத்துக்களை பரப்புகிறார்கள். திருமாவளவன் இயக்குனர் அமீர் என்று பலரும் வரிசையாக ஒரு புறம் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் மறுபுறம் அவரது கருத்தை பாஜகவினர் திரித்து விட்டதாகவும் பொய் பிரச்சாரம் செய்து வந்தார்கள். இந்நிலையில் திமுகவின் வழக்கறிஞர் அணி பாஜக நிர்வாகி அமீத் மாளவியா மீது உதயநிதியின் பேச்சை திரித்து பதிவிட்டதாக வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. திமுக வழக்கறிஞர் அணி கொடுத்த புகாரில் திருச்சி போலீசார் பாஜக நிர்வாகி அமீத் மாளவியா மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
இதுவரையில் தமிழகத்தின் எல்லையை தாண்டாமல் இருந்த திமுகவின் இந்து விரோத நடவடிக்கைகளும் இந்திய விரோதப் பிரிவினை பேச்சுக்களும் தற்போது பாஜகவின் மூலமாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மாநிலம் கடந்து தேசிய அளவிலும் தேசம் கடந்து உலக அளவிலும் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது . அதன் மூலம் திமுகவின் மீது இந்துக்களுக்கும் இந்தியர்களுக்கும் பெரும் அதிருப்தியும் எதிர்ப்பு மனநிலையும் மேலோங்கி வருகிறது. இதைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இன்று பாஜக நிர்வாகி மீது வழக்கு போட்டு அவரை அலைக்கழிப்பதாக இங்கு திமுக வழக்கறிஞர் அணி செய்திருக்கும் வழக்கு முழுவதுமாக திமுகவிற்கு அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதும் வழக்காக மாற இருக்கிறது என்பதுதான் எதார்த்தம்.
திமுகவினர் பதிவு செய்திருந்த இந்த வழக்கை பாஜக வழக்கறிஞர் அணியின் மூலம் சட்டப்படி சந்திக்க வழக்கு உச்ச நீதிமன்றம் போகும். திமுக தரப்பில் உதயநிதியின் பேச்சு திரித்து பதிவேற்றப்பட்டதாக விசாரணை வரும் போது உண்மையில் என்ன நடந்தது? என்பதை நீதிமன்ற பார்வைக்கு முழுமையாக கொண்டு சேர்க்க பாஜக தயாராகும். அப்போது சனாதன ஒழிப்பு மாநாடு அந்த மாநாட்டில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்ட இரண்டு அமைச்சர்கள் பங்கேற்று பேசியது உதயநிதியின் தெளிவான பேச்சுக்கள் காணொளியாக திமுகவின் வழக்கறிஞர் அணி மூலமாகவே ஆவணமாக அங்கு கொண்டு சேர்க்கப்படும் .அந்த வகையில் திமுகவின் ஆட்சியில் இந்து சனாதன ஒழிப்பு மாநாடு என்று ஒரு மதத்திற்கு எதிரான துவேஷ மாநாட்டிற்கு முழுமையான அனுமதி கொடுத்தது. அதை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அந்த மாநாட்டில் இந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது. நீதிமன்றத்தின் முன் ஆவணப்பூர்வமாக போய் சேரும். இதில் ஒரு அமைச்சர் திமுக தலைமை குடும்பத்தை சேர்ந்தவர் முதல்வரின் மகன் . திமுக கட்சியின் இளைஞர் அணியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பது திமுக கட்சிக்கு பெரும் சிக்கலை கொடுக்கும். மற்றொரு அமைச்சர் தமிழகத்தில் சனாதன தர்மத்தையும் அதன் வழியிலான ஆலயங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற இந்து அறநிலையத்துறையின் அமைச்சராக இருப்பவர் என்ற வகையில் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் இந்து தர்மத்திற்கும் ஆலயங்களுக்கும் எதிராக நடந்து கொண்டிருக்கும் அச்சுறுத்தல் நீதிமன்றத்தின் முன் தெளிவாக போய் சேரும்.
இந்த வழக்கிற்கு வலு சேர்க்கும் வகையில் திமுகவினர் கடந்த காலங்களில் உதயநிதி – ஆ ராசா – இந்து அறநிலையத்துறை அமைச்சர் – சேகர்பாபு – கனிமொழி – முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அவரது சொந்த குடும்பத்தினர் பேசிய அனைத்து இந்து விரோத பேச்சுக்கள் கருணாநிதி அவர் காலத்தில் பேசிய பேச்சுக்கள் திமுகவின் கூட்டணியில் இருக்கும் விசிக – கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினரின் இந்து விரோத நடவடிக்கைகள் இதற்கெல்லாம் மகுடம் வைத்தார் போல் இன்று சனாதன எதிர்ப்பு மாநாடு – ஒழிப்பு மாநாடு , சிலை ஒழிப்பு மாநாடு – தாலி அகற்றும் விழா என்று ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் இந்து தர்மத்திற்கு எதிராக திகவினர் முன்னெடுத்த மாநாடுகள் அதில் கலந்து கொண்டவர்கள் பேசிய பேச்சுக்கள் உள்ளிட்ட அனைத்தும் ஆவணமாக உச்ச நீதிமன்றத்தில் போய் சேரும்
மேலும் 70 களில் ராமரின் உருவப் படத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று அவமதித்தது முதல் அதை செய்ததால் தான் அதிக அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது என்ற வீரமணியின் பேச்சு. ராமர் பாலத்தை தகர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்தோம். நிச்சயம் அதை தகர்ப்போம் என்று பொது மேடையில் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் ராஜ்யசபா எம் பி யும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன டி ஆர் பாலு பேசிய பேச்சு என்று ஒட்டுமொத்த திமுகவின் இந்து விரோத இந்திய விரோத செயல்பாடுகளும் நீதிமன்றத்தில் ஆவண பூர்வமாக கொண்டு சேர்க்கப்படும்.
எதிர் தரப்பினர் வைக்கும் வாதங்களையும் ஆவணங்களையோ திமுகவினரால் இல்லை என்று மறுக்கவோ ஆமாம் என்று ஏற்கவும் முடியாது. இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது அதில் நாங்கள் இப்படித்தான் பேசினோம் என்று அவர்களாகத்தான் நீதிமன்றத்திற்கு வழக்கு பதிந்து போகிறார்கள். அதனால் அவர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. எதிர் தரப்பினர் வைக்கும் ஆவணங்களை ஆமாம் என்று சொல்லும் பட்சத்தில் அவர்களது ஒட்டுமொத்த இந்து விரோத நடவடிக்கைகளையும் அவர்களே ஒப்புக்கொண்டது போல் ஆகும் சட்டம் தன் கடமையை செய்யும் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதை நூற்றாண்டு காலம் தமிழகத்தில் சனாதன தர்மமும் அதன் வழியில் வாழ்ந்த மக்களும் அந்த தர்மத்தின் அடையாளமாக இருந்த ஆலயங்களும் சனாதன தர்மத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பெரும் அநீதிகளை கடந்து வந்த அர்ச்சகர் சமூகமும் இது நாள் வரையில் கடந்த இன்னல்களும் எதிர்கொண்ட துயரங்களுக்கும் ஒரு நிரந்தரமான முடிவு சட்டத்தின் வழியில் கிடைக்கும்.
அந்த வகையில் திமுக வின் இந்த ஆட்சியும் அதில் அவர்கள் வெளிப்படையாக இந்து சனாதன ஒழிப்பு மாநாடு என்று முன்னெடுத்ததும் அதற்கு பின்புலமாக திராவிடர் கழகம் இருந்ததும் தமிழகத்தில் இருக்கும் இந்துக்களை மொத்தமாக அழித்து தங்களின் அஜெண்டாக்களை நிறைவேற்றிக் கொள்ள இந்த ஆட்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தோடு அவர்கள் செயல்பட்டது. அதன் பின்னணியில் இருக்கும் சதியும் சொந்த ஆதாயத்திற்காகவும் ஆட்சி அதிகாரத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்படும் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் .அதன் ஆதரவான ஆட்சி அதிகாரத்தில் இருந்த திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஆட்சி – கட்சி இரண்டும் சட்டத்தின் பிடியில் சந்தேகத்திற்கு இடம் இன்றி நிற்கும்.
இதன் மூலம் கிடைக்கப்படும் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு இனி எந்த காலத்திலும் தமிழகத்தின் சனாதன தர்மம் மட்டும் அல்ல.எந்த ஒரு மதத்திற்கும் நம்பிக்கைக்கும் எதிரான துவேஷங்களையும் அவதூறுகளையும் பேசுவதற்கு எந்த ஒரு கட்சிக்கும் அமைப்பிற்கும் தனிநபர்களுக்கும் துணிச்சல் வராத வகையிலான ஒரு எச்சரிக்கை பாடமாக அந்த தீர்ப்பு அமையும். அந்த வகையில் கடந்த காலங்களில் திமுகவினர் பகுத்தறிவு முற்போக்கு என்ற பெயரில் சனாதன தர்மத்திற்கு எதிராக செய்த அத்தனை அராஜகங்களுக்கும் இன்று அவர்களாகவே ஒரு முடிவை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் தமிழகம் நீதிமன்றத்தின் வாயிலாக தனது ஆன்மீக பொலிவை மீண்டும் மீட்டெடுக்கும். தமிழகத்தில் இருக்கும் சனாதன விரோத கட்சிகள் அமைப்புகள் தனி நபர்களின் சனாதன எதிர்ப்பு இந்து விரோத அரசியல் முடிவுக்கு வரும்.