பொது வாழ்வில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும் திமுக பிரமுகர், கண்டிக்க தவறிய தலைமை –  காயத்ரி ரகுராம் போலிஸில் புகார்

பொது வாழ்வில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும் திமுக பிரமுகர், கண்டிக்க தவறிய தலைமை – காயத்ரி ரகுராம் போலிஸில் புகார்

Share it if you like it

மதுரை மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி அரசியல் நாகரிகமின்றி பெண் அரசியல் தலைவர்களை பற்றி கீழ்தரமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் பா.ஜ.க.பெண் நிர்வாகி காயத்ரி ரகுராமன் போலீசில் புகார் அளித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தி.மு.க. தகவல் தொடர்பு பிரிவில் பொறுப்பாளராக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி காயத்ரி ரகுராமன் ஆகியோர்களை பற்றி மிகவும் கீழ்தரமாக சித்தரித்து ட்வீட் போட்டுள்ளார்.


மேலும் தி.மு.க. எதிர்கட்சியாக இருந்த போது மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி இழிவான புகைப்படம் பதிவிட்டுள்ளார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த ஒரு பதிவினை பதிவிட்டார். அவர் செய்த பதிவிற்கு பெண்கள் மத்தியில் கடும் சர்ச்சையை அப்போது கிளப்பியது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால் தற்போது திமுக ஆட்சியிலும் கூட தொடர்ந்து செய்து வருகிறார். இதனை தொடர்ந்து காயத்ரி ரகுராம் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கினர். 21.10.2021 அன்று இது சம்பந்தமாக புகாரளித்துள்ளார். புகாரளித்தது தெரிந்து User Name மாற்றி Twitter கணக்கை லாக் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.


Share it if you like it