துக்கம் விசாரிக்க செல்லும் வீட்டிற்கு கூடவா சிவப்பு கம்பளம் வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வராக இருப்பவர் மு.க.ஸ்டாலின். இவரது, ஆட்சியில் தொடர்ந்து விளம்பரங்கள் மட்டுமே இன்று வரை பிரதானமாக இருந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்தவகையில், திண்டிவனத்தில் அமைச்சர் எ.வ.வேலுவை வரவேற்கும் விதமாக போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலையில் கழக கண்மணிகள் அலங்கார வளைவுகளை அமைத்து இருந்தனர். இப்புகைப்படம், அண்மையில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது.
அதேபோல, தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏரியின் மராமத்து பணிகளை சிவப்பு கம்பள விரிப்பின் மீது நின்று கொண்டு ஆய்வு செய்த புகைப்படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்து.

அந்த வகையில், சென்னையில் இறந்த தனது கட்சிக்காரர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க செல்லும் பொழுது கூடவா சிவப்பு கம்பளம் வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்தான, காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
