மத்திய அரசு நடத்தும் பள்ளிகள் குறித்து எந்தவித புரிதல்களும் இல்லாமல் வழக்கம் போல உளறிக் கொட்டி இருக்கிறார் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.
தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே என்பது பழமொழி. அதற்கு, ஏற்ப இன்று வரை தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்றும் கழக கண்மணிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அந்த வகையில், மின் தடைக்கு அணில்கள் தான் காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருந்தார். அதனை தொடர்ந்து, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசியதாவது;
முன்பு எல்லாம் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இரண்டாம் ஆண்டு தேர்வில் வெற்றி பெறவில்லை எனில் அவர், மூன்றாம் ஆண்டு செல்ல முடியாது. அதே போல, நான்காம் ஆண்டும் செல்ல முடியாது. இதனை, எல்லாம் கருத்தில் கொண்டு, தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் ஆண்டு செல்லும் வகையில் நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம். இதுதவிர, அப்பப்போ மாணவர்கள் இடையில் தேர்வி எழுதிக் கொள்ளலாம். இது எல்லாம், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செய்து வருகிறோம் என மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறி இருந்தார்.
இதனிடையே, அமைச்சர் பொன்முடி பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அப்பொழுது, அவர் கூறியதாதவது; கேந்திர வித்தியாலயா, நவோதயா மற்றும் சைனிக் பள்ளிகளில் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள். இந்த, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள். தமிழ் படிக்க வேண்டும் என்ற விதியை, மத்திய அமைச்சர் எல். முருகன் ஏற்படுத்தி, கொடுக்க வேண்டும். என, நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.
இதில், கொடுமை என்னவென்றால், மேற்கூறிய பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்து தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது கூட தெரியாமல் அமைச்சர் பொன்முடி வழக்கம் போல உளறிக் கொட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.