கோவிலுக்கு சொந்தமான பணத்தை இனி எங்கள் ஆட்கள் வசூலித்து கொள்வார் என தி.மு.க. மேயரின் கணவர் பேசியதாக ஆடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது பஜ்ஜீ கடை, பிரியாணி கடை மற்றும் ஓசி தேங்காய் கேட்டு அப்பாவி மக்களை மிரட்டி வந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, தி.மு.க.வை சேர்ந்த அடிமட்ட தொண்டரில் தொடங்கி கவுன்சிலர்கள் வரை மக்களை மிரட்டி பணம் வசூல் செய்வது போன்ற காணொளிகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சந்தை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கோவில் கமிட்டியின் சார்பில் வியாபாரிகளிடமிருந்து இன்று வரை பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், கோவை மேயர் கல்பனாவின் கணவர் இனி சந்தை வாடகையை எனது ஆட்கள் வசூல் செய்து கொள்வார்கள். இனி, நீங்கள் வசூல் செய்ய வேண்டாம் என வழக்கமாக பணம் வசூல் செய்யும் நபரிடம் தொலைபேசியின் மூலம் தெரிவித்து இருக்கிறார். இதற்கு, அந்த நபர் கோவில் கமிட்டியிடம் பேசிக் கொள்ளுங்கள் என அவர் கூறியுள்ளார்.
கோவில்களை தி.மு.க. அரசு சரியான முறையில் நிர்வாகம் செய்யவில்லை என இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. மேயரின் கணவர் கோவிலுக்கு சொந்தமான பணத்தை நாங்கள் வசூல் செய்து கொள்கிறோம் என்பது போல அவர் பேசியதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.