ஆளும் கட்சிக்கு இந்து முன்னணி பொறுப்பாளர் கெடு!

ஆளும் கட்சிக்கு இந்து முன்னணி பொறுப்பாளர் கெடு!

Share it if you like it

யூ2 புரூட்டஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என இந்து முன்னணி பொறுப்பாளர் தமிழக அரசுக்கு கெடு விதித்துள்ளார்.

தி.மு.க.வின் ஆதரவு யூடியூப் ஊடகமான யூ2புரூட்டஸ், ஹிந்துக்களின் வழிபாட்டுக்குறிய தெய்வமான சிதம்பர ‘நடராஜர் பற்றியும். அவர் காலை தூக்கி நிற்க இதுதான் காரணம்’ என்கிற தலைப்பில் அண்மையில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்து. அக்காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி கோடிகணக்கான, சிவபக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது. மேலும், மனசு புண்பட்டா கம்பெனி பொறுப்பாகாது என்று திமிருடன் அதற்கு தலைப்பு இடப்பட்டு இருந்தன. தில்லை நடராஜர் எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவிற்கு கீழ்த்தரமாக விமர்சனம் செய்யபட்டு இருந்தார். அக்காணொயை வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க, விஷ்வ ஹிந்து பரிசத், பல்வேறு ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள். இதுதவிர, நடராஜரை இழிவுப்படுத்தியவன் மீது காவல்துறையில் இன்று வரை புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஹிந்துக்கள் புனிதமாக மதிக்கும் கடவுளான நடராஜரை யூ2புரூட்டஸ் இழிவுப்படுத்தி இன்றோடு ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடப்பதாக கூறிக்கொள்ளும் ஸ்டாலின் தலைமையிலான அரசு. ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய நபர் மீது இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காமல் கள்ள மெளனம் காத்து வருகிறது என்பதே நிதர்சனம்.

அந்த வகையில், தில்லை நடராஜரை இழிவுப்படுத்திய யூ2புரூட்டஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் தென்காசி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு வழங்கினர். அதன்பின்னர், இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது; நடராஜரை இழிவுப்படுத்தியவர்களை 2 இன்னும் இரண்டு நாட்களில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். எங்கள் மனுவின் மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் ஹிந்துக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Share it if you like it