ஜப்பான், ஜெர்மனி மற்றும் ஃபிரெஞ்சு மொழிகள் கற்றுக் கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹிந்தி படித்தால் பானிபூரியை மட்டுமே விற்க முடியும். தமிழகத்தில், ஹிந்தியை அனுமதிக்க மாட்டோம் என தி.மு.க. தொடர்ந்து கூறி வருகிறது. இதுதவிர, ஹிந்தி தெரியாது போடா எனும் வாசகம் கொண்ட டீ சர்ட்டை அணிந்து உதயநிதி ஸ்டாலின் தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார். இப்படியாக, இந்திய மொழிகளில் ஒன்றான ஹிந்தியை தொடர்ந்து தி.மு.க. தாக்கி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், முதல்வர் ஸ்டாலின் தமிழக மாணவர்களுக்கு வழங்கிய அறிவுரையில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;
தாய் மொழி தமிழ், உலகோடு நம்மை இணைக்கக் கூடிய மொழி ஆங்கிலம். இந்த 2 மொழிகளையும் எழுத, பேச, படிக்க வேண்டும். கல்லூரிப் படிப்பை முடித்து வெளி வரும் மாணவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது ஆங்கில பேச்சாற்றல். ஆங்கிலத் திறன் குறைவாக இருப்பதால் சில மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. எனவே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து கல்லூரிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில பேச்சாற்றல் என்ற பாடத்திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படும். ஆங்கிலம் மட்டுமின்றி ஜப்பானிய, ஜெர்மானிய, ஃபிரெஞ்சு மொழிப் பயிற்சிகளும் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்தான, செய்தியினை ஜூனியர் விகடன் வெளியிட்டு இருந்தது.
அந்நிய மொழிகளை கற்றுக் கொள்ள மாணவர்களை அழைக்கும் முதல்வர் ஸ்டாலின். தேசிய மொழியான ஹிந்தியை மட்டும் எதிர்ப்பது ஏன்? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. பத்தாம் வகுப்பு தமிழ் பாட தேர்வில் 47,000 மாணவ, மாணவியர் தோல்வியை தழுவி இருக்கின்றனர். தாய் மொழியான தமிழ் விடியல் ஆட்சியில் அழிந்து வரும் இவ்வேளையில், ஜப்பானிய, ஜெர்மானிய, ஃபிரெஞ்சு மொழிக்கு முதல்வர் முட்டு கொடுப்பது அவசியமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.