டாஸ்மாக் பாடல் பாடிய கோவன் எங்கே? என நெட்டிசன்கள் அவரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் மற்றும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் கோவன். இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை கண்டித்தும், மதுவிற்கு எதிராகும் பாடல் பாடி காணொளி ஒன்றை வெளியிட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். அ.தி.மு.க. ஆட்சியில் மதுவிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். விடியல் ஆட்சி தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் மது குடிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் தான், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுவை அனுமதிக்கும் வகையில் தி.மு.க. அரசு சட்ட திருத்தம் செய்து இருந்தது. இதற்கு, பொதுமக்களிடம் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன. இதையடுத்து, திருமண மண்டபங்களில் மது பரிமாறும் சட்டத்திருத்தத்தை தமிழக அரசு திடீரென ரத்து செய்துள்ளது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் மூடு டாஸ்மாக்க மூடு என பாடல் பாடிய கோவன் தற்போது எங்கே? பதுங்கி இருக்கிறார் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.