பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட புலியில் பல்லி இருந்ததை சுட்டிக்காட்டிய நபர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை மன உளைச்சல் காரணமாக தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட மகன்.
தமிழக அரசு, வழங்கி வரும் பொங்கல் பரிசு பையில். தரமற்ற பொருட்கள் இருப்பதாகவும். 21 பொருட்களில் பாதி பொருட்கள் மட்டுமே அப்பையில் உள்ளதாக ஆளும் கட்சி மீது ஏழை, எளியவர்கள், கடும் விமர்சனத்தை முன்வைத்து பேசிய காணொளிகளை பிரபல ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில், வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில். பல்லி இருந்ததை கண்டுபிடித்து, சுட்டிக்காட்டிய நந்தன் என்பவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து உள்ளது.
தனது தந்தைக்கு, ஏற்பட்ட அநீதியை கண்டு, கடும் மன உளைச்சல் அடைந்த அவரது மகன் குப்புசாமி. என்பவர் நேற்றைய தினம், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு.
பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறிய தன் தந்தை திரு.நந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற திரு.குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது, அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும், தெரிவித்து கொள்கிறேன், வலைத்தளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம், உண்மையை கூறினால் ஜாமினில் வெளிவரா வழக்கு என திமுகஆட்சியில் ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி தொடர்கிறது, கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம்தான் பதிலாக கிடைக்கிறது! இது தற்கொலை அல்ல,ஜனநாயக படுகொலை.