தி.மு.க.வில் இங்கிலீஷ் நன்கு பேச தெரிந்த அமைச்சர் இவர்தான் – கார்த்தி சிதம்பரம் கருத்து!

தி.மு.க.வில் இங்கிலீஷ் நன்கு பேச தெரிந்த அமைச்சர் இவர்தான் – கார்த்தி சிதம்பரம் கருத்து!

Share it if you like it

தி.மு.க. அமைச்சர்களில் ஆங்கிலம் நன்கு அறிந்தவர் பி.டி.ஆர் எனவும் மற்ற அமைச்சர்களுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆங்கிலம் தெரியாது என்கிற ரீதியில் கார்த்தி சிதம்பரம் பேசியிருக்கும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கார்த்தி சிதம்பரம். இவர், தி.மு.க.விற்கு அவ்வபோது அறிவுரை வழங்குவதை வழக்கமாக கொண்டவர். இதுதவிர, இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் கூட்டணி கட்சியினர் மத்தியில் கோவத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி விடுவது உண்டு. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற 11 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. பா.ஜ.க. மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. EVM இயந்திரத்தில் பா.ஜ.க. சூழ்ச்சி செய்து இருக்க கூடும் என எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பி வந்தன.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு, சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார் ;

ஓட்டு எண்ணும் இயந்திரம் நம்ப தகுந்தது ஆகும்.  இது எப்போதும் எனது பார்வையாகவே இருந்து வருகிறது. நான் அதற்கு ஆதரவாக நிற்கிறேன். அரசியல் கட்சிகள் மத்தியில், ஈ.வி.எம் இயந்திரம் மீது சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக முடிவுகள் அவர்களுக்கு ஆதரவாக இல்லாதபோது. இதுவரை யாரும் தங்கள் கூற்றுக்களை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. எந்தவொரு தேர்தலின் முடிவும் எதுவாக இருந்தாலும். ஈ.வி.எம் மீது பழிபோடுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. எனது அனுபவத்தில், ஈ.வி.எம் அமைப்பு வலுவான, துல்லியமான மற்றும் நம்பகமானதாகும் என்று குறிப்பிட்டிருந்தார். இவரின், கருத்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் மத்தியில் பெரும் புயலை கிளப்பியிருந்தது.

இதையடுத்து, ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 6 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை தி.மு.க.வினர் கொண்டாட வேண்டாம் என்று தனது கோவத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில், பிரபல இணையதள ஊடகமான விகடனுக்கு கார்த்தி சிதம்பரம் பேட்டியளிக்கும் போது இவ்வாறு கூறினார் ; ப.சிதம்பரத்திற்கு அடுத்து அனைத்து வடநாட்டு ஊடகங்களும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை பேட்டி எடுக்க விரும்புவது ஏன்? என விகடன் நெறியாளர் கேட்கிறார். இதற்கு, கார்த்தி சிதம்பரம் கூறியதாவது, திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து முதன் முறையாக டெல்லியில் இருக்கும் மீடியாக்களுக்கு நன்கு பேச தெரிந்த, ஆங்கிலம் நன்கு அறிந்த ஒரே அமைச்சர் பி.டி.ஆர். மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார். தி.மு.க. அமைச்சர்களுக்கும், ஏன்? முதல்வருக்கு கூட ஆங்கிலம் தெரியாது என்ற ரீதியில் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it