பா.ஜ.க. மூத்த தலைவரின் வீட்டை சூறையாடிய அமைச்சரின் அடியாட்கள்?

பா.ஜ.க. மூத்த தலைவரின் வீட்டை சூறையாடிய அமைச்சரின் அடியாட்கள்?

Share it if you like it

பா.ஜ.க. துணை தலைவர் சசிகலா புஷ்பாவின் வீட்டை ஆளும் கட்சியை சேர்ந்த குண்டர்கள் தாக்கி இருக்கும் சம்பவம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நகர தி.மு.க.வின் சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில், இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். அப்போது அவர், உரையாற்றும் போது, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை ஒருமையில் விமர்சனம் செய்து இருந்தார். நீ பேசிகொண்டு இருக்கும் போதே மேடையில் ஏறுவோம் என ஆவேசமாக பேசியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில், தூத்துக்குடி அபிராமி மஹாலில் இந்த விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ.க. துணை தலைவர் சசிகலா புஷ்பா, திருநெல்வேலி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, சசிகலா பேசும் போது, அமைச்சர் கீதா ஜீவனையும், தி.மு.க.வையும் வெளுத்து வாங்கியிருந்தார். இக்காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஆளும் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் கீதா ஜீவனின் அடியாட்கள் சசிகலா புஷ்பாவின் வீடு மற்றும் காரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும், அதுகுறித்தான காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இச்சம்பவம், பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருபவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். இவரை, எம்.பி. பதவியிலிருந்து தூக்குவேன் என்று சசிகலா புஷ்பாவின் கணவரும் டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ராமசாமி சபதம் மேற்கொண்டுள்ளார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it