சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு வாகனத்தில் அமர்ந்து சிலர் சீட்டாட்டம் ஆடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சியின் மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதுதவிர, அரசு ஊழியர்களின் அட்டூழியங்களும், அடாவடிகளும் தொடர்கதையாக இருந்து வருகின்றன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, இச்சம்பவத்தை குறிப்பிட்டு கூறலாம். அதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாக இருப்பது திருத்தணி முருகன் கோவில்.
இது, அறுபடை வீடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த, கோவில் உலக புகழ் பெற்றதாகும். அந்தவகையில், நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில், கோவில் அதிகாரிகள் அசைவ உணவு சாப்பிட்ட சம்பவம் அண்மையில் முருக பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு வாகனத்தில் (ஜீப்) அமர்ந்து கொண்டு நான்கு பேர் சீட்டு ஆடியுள்ளனர். இச்சம்பவத்தை, பார்த்த யாரோ ஒருவர் காவல்துறைக்கு தொலைபேசி வாயிலாக புகார் தெரிவித்துள்ளார். புகாரின், அடிப்படையில் காவலர் ஒருவர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, புகார் தெரிவித்த அந்த நபர் தனது செல்போனை ஆன் செய்து வைத்து கொண்டு ஜீப்பில் உள்ளவர்களிடம் சரமாரியான கேள்விகளை முன்வைக்கிறார். இதனை, சற்றும் எதிர்பார்க்காத அந்த நான்கு பேரும் சீட்டாத்தை நிறுத்தி விட்டு தலைதெறிக்க ஓடிய காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில், விடியல் ஆட்சி எந்த லட்சணத்தில் இயங்கி வருகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.