4 பெண்கள் பலி… தி.மு.க.தான் பொறுப்பு -எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு!

4 பெண்கள் பலி… தி.மு.க.தான் பொறுப்பு -எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு!

Share it if you like it

இலவச சேலை வழங்கிய நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில், 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தி.மு.க. அரசு தான் பொறுப்பு என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது ;

தி.மு.க., ஆட்சியின் நிர்வாகத் திறமை இன்மையால், வயது முதிர்ந்த, நான்கு பெண்கள், பரிதாபமாக தங்கள் இன்னுயிரை இழந்த துயர நிகழ்ச்சி, வாணியம்பாடியில் நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் விழாவுக்கு, அரசின் இலவச வேட்டி – சேலையை வழங்கி இருந்தால், தனியார் வழங்கும் இலவச சேலையை வாங்க, ஒரே நேரத்தில், 1,500 பெண்கள் குழுமியிருக்க வாய்ப்பில்லை.

கூட்ட நெரிசல் காரணமாக, ஏழை பெண்கள், தங்கள் இன்னுயிரை இழந்திருக்க மாட்டார்கள். நடந்தேறிய இந்த துன்ப நிகழ்வுக்கு காரணமான அதிகாரிகள் மீதும், இந்நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு தைப்பொங்கல் திருநாளுக்காண விலையில்லா வேட்டி,சேலையை வழங்காத விடியா தி.மு.க. அரசுதான் இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவர் குடும்பத்தினருக்கும் இந்த அரசு அறிவித்த நிவாரணத்தை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

4.2.2023அன்று பிற்பகல்,  வாணியம்பாடியில் ஒரு தனியார் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில்,ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய வயது முதிர்ந்த 4 மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்

இந்த ஆண்டு தைப்பொங்கல் திருநாளுக்காண விலையில்லா வேட்டி,சேலையை வழங்காத விடியா திமுக அரசுதான் இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும், உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவர் குடும்பத்தினருக்கும் இந்த அரசு அறிவித்த நிவாரணத்தை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்


Share it if you like it