தி.மு.க. தலைவரை அவமதித்த அமெரிக்கா!

தி.மு.க. தலைவரை அவமதித்த அமெரிக்கா!

Share it if you like it

தமிழக முதல்வரை அமெரிக்கா அவமதிப்பு செய்து விட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுக்கத் தொடங்கியது. இந்த போர் சுமார் ஓராண்டை நெருங்கியும் தொடர்ந்து வருகிறது. இப்போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனிடையே, உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை பெரும் முயற்சி எடுத்து பத்திரமாக மீட்டு கொண்டு வந்த பெருமை மத்திய அரசை சாரும்.

பாரதப் பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் உள்ளிட்டவர்களின் அயராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இதனை மட்டம் தட்டும் நோக்கிலும், மத்திய அரசுக்கு நற்பெயர் கிடைத்து விட கூடாது என்ற எண்ணத்தில் விடியல் அரசு அதிலும் ஸ்டிக்கர் ஒட்ட துவங்கியது.

அந்த வகையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை போலந்து, பெலாரஸ் வழியாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியிருந்தார். இதில், கொடுமை என்னவென்றால், தமிழக மாணவர்களை மீட்க தி.மு.க. தலைமையில் எம்.பி.க்கள் குழு, மாணவர்களை அழைத்து வர தனி விமானம் என பல்வேறு அறிவிப்புகளை தி.மு.க. அரசு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும், ரஷ்யா இதற்கு செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில் தான், பாரதப் பிரதமர் மோடி நினைத்தால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். இதற்கு, இந்தியா முன் வர வேண்டும் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்த அமெரிக்கா தமிழக முதல்வரிடம் ஏன்? கோரிக்கை விடுக்கவில்லை. அவரிடம், கூறியிருந்தார் தனி குழு ஒன்றை அமைத்து இருப்பார் அல்லவா?. இது, தி.மு.க. தலைவர் ஸ்டாலினை அவமதிக்கும் செயல் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Share it if you like it