ஈரோட்டில் தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து பெண்கள் போராட்டம் நடத்தி இருக்கும் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவோரா. இவர், கடந்த மாதம் திடீர் மாரடைப்பு காரணமாக அகால மரணமடைந்தார். இதனை தொடர்ந்து, அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், பிப் -27 தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அந்த வகையில், தனது கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதேபோல, அ.தி.மு.க. சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள தென்னரசுவை ஆதரித்து பா.ஜ.க.வும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றி பெற வைக்கும் விதமாக பல்வேறு கள்ளதனங்களை தி.மு.க. தொடர்ந்து செய்து வருகிறது. இந்த நிலையில் தான், தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பெண்களை தி.மு.க. ஏமாற்ற முயற்சி செய்துள்ளது. அதாவது, காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு தி.மு.க. பணம் கொடுக்கமால் கடந்த மூன்று நாட்களாக ஏமாற்றியுள்ளது. இதனை, கண்டித்து பெண்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.